மேலும் அறிய
Advertisement
கொட்டும் மழை... மீண்டும் தொற்று... பொன்னையன் டூ அண்ணாமலை... கோவை மண்டலத்தில் ஹைலைட்!
கோவையில் ஒமிக்ரான் தனி வார்டு தயார், தொடரும் மழை, அதிகரிக்கும் கொரோனா தொற்று உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
- தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை எனவும், யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கோவை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- கர்நாடகா மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
- கோவையில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
- கோவையில் தொடர்ந்து வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மாநகர் மற்றும் புற நகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- வேளாண் திருத்தச் சட்டங்கள் வேண்டும் என்று விவசாயிகள் கேட்கும் காலம் வரும் அந்த நம்பிக்கை உள்ளது எனவும், அப்போது இச்சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்போம் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் செய்தியாளர்களிடம் இதனை அவர் தெரிவித்தார்.
- அதிமுக இரட்டை தலைமையே சிறந்தது. கண்ணும், இமையும் போல இரட்டைத் தலைமை செயல்பட்டு வருகிறது எனவும், சசிகலாவை ஒரு போதும் அதிமுகவிற்குள் அனுமதிக்கமாட்டோம் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
- ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அச்சுறுத்தல் உள்ளதால் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சியில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4.5 இலட்ச ரூபாய் பணம் சிக்கியது. பணம் குறித்து இலஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
- கோவை மாவட்டம் காரமடை குந்தா காலனி பகுதியில் நத்தைகள் படையெடுப்பால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வீடுகள் மற்றும் சுற்றுவட்டாரங்களை நத்தைகள் ஆக்கிரமித்து உள்ள நிலையில், தூர்நாற்றமும் வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நத்தைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion