மேலும் அறிய

‘நஷ்டத்தில் இருந்த கைத்தறி துணிநூல் துறை ரூ.20 கோடி லாபத்தில் இயங்குகிறது’ - கைத்தறித் துறை அமைச்சர் காந்தி

”கைத்தறி துணிநூல் துறையில் கடந்த ஆண்டு 9 கோடி நஷ்டத்தில் இருந்தது. இப்போது 20 கோடி லாபத்துடன் இந்த துறை இயங்கி வருகின்றது. இதில் 10 கோடி ரூபாய் நவீனமயப்படுத்த செலவிடபட்டு உள்ளது.”

கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஹேண்ட் லூம்ஸ் ஆப் இந்தியா விற்பனையகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் பாலமுருகன் புதிய விற்பனை நிலையத்தை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி இன்று  திறந்து வைத்தார். இதில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கைத்தறி துணிநூல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், ஒன்றரை ஆண்டுகளாக கைத்தறி துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நெசவாளர் முன்னேற்றத்திற்க்காக இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. கைத்தறி துறையை பொறுத்த வரை 154 கடைகளில் தமிழகத்தில் 101 இடங்களிலும், பிற இடங்களில் 49 கடைகளும் இருக்கிறது. பழைய மாடல்களை மாற்றி தனிக்குழுக்கள் ஏற்படுத்தி  நவீனப்படுத்தி இருக்கின்றோம். 45 கடைக்கள் புனரமைக்க பட்டு இருக்கின்றது.

கைத்தறி துணிநூல் துறையில் கடந்த ஆண்டு 9 கோடி நஷ்டத்தில் இருந்தது. இப்போது 20 கோடி லாபத்துடன் இந்த துறை இயங்கி வருகின்றது. இதில் 10 கோடி ரூபாய் நவீனமயப்படுத்த செலவிடபட்டு உள்ளது. நெசவாளர் முன்னேற்றத்திற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் விரும்பும் வகையில் இந்த துறை செயல்பட்டு வருகிறது. கோ ஆப் டெக்ஸ் துறையும் சிறப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் நாளை தோடர்கள் பழங்குடிக்காக தனி சொசைட்டி துவங்கப்படுகின்றது. நெசவாளர்களுக்கு கூலி மிகக்குறைவாக உள்ளது. அதனால் அவர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு வழங்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் போதாது. தமிழகத்தில் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் சார்பில் 18 மில்கள் இயங்கி வந்தது. இப்போது 6 மில்கள் தான் இருக்கிறது, மற்றவை மூடப்பட்டு விட்டது. செஸ் வரியை நீக்க வேண்டும் என கேட்ட போது, உடனே செய்து கொடுக்கப்பட்டது. 

டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் கோவை இருக்கிறது. விருதுநகரில் மெகா டெக்ஸ்டைல் பார்க் துவங்க பிரதமரை கூப்பிட வேண்டும் என பியூஸ்கோயல் கேட்டுக்கொண்டார். கண்டிப்பாக கூப்பிடுவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். நூல் விலை உயர்வு தொடர்பாக நிதி அமைச்சர், டெக்ஸ்டைல் அமைத்ததை பார்த்த போது, இறக்குமதி வரி குறைத்தார்கள். இது தொடர்பாக நியாயமான கோரிக்கைகளை உடனே கேட்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “தேசிய பஞ்சாலை கழகம் தொடர்பாக மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க  இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார். அப்போது தேசிய பஞ்சாலைக் கழக ஆலைகளை பார்வையிட சென்ற போது, தனக்கு அனுமதி கொடுக்கவில்லை என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget