மேலும் அறிய

பேருந்தில் இலவச டிக்கெட் விவகாரம்: ”மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை..” : கோவை மாவட்ட எஸ்.பி விளக்கம்..

இலவச பயணசீட்டு விவகாரத்தில் மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும், அதிமுக-வைச் சேர்ந்தவர்கள் மீது மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் மாவட்ட எஸ்.பி., விளக்கமளித்துள்ளார்

இலவச பயணசீட்டு விவகாரத்தில் மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும், அதிமுக-வைச் சேர்ந்தவர்கள் மீது மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், ஏ.பி.பி.,நாடுவிற்கு கோவை மாவட்ட எஸ்.பி.,பத்ரி நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என நடத்துநரிடம் மூதாட்டி தகராறு செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு வாங்க மறுத்த மூதாட்டி

அரசுப் பேருந்தில் மகளிர் இலவசப் பயணத் திட்டம் தொடர்பாக, அமைச்சர் பொன்முடி `ஓசி' என்று கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.இந்த நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற மூதாட்டி பயணம் செய்தபோது இலவச பயணச்சீட்டு வேண்டாம் என கூறி நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டார். மூதாட்டிக்கு நடத்துனர் இலவச பயணச் சீட்டு கொடுத்திருக்கிறார். அதை வாங்க மறுத்த மூதாட்டி, ``நான் ஓசில வர மாட்டேன். காசு வாங்கலைனா எனக்கு டிக்கெட் வேண்டாம். தமிழ்நாடே போனாலும் பரவாயில்லை நான் இப்படித்தான் வருவேன், வேண்டாம்னா வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.

நடத்துனர் இலவசப் பயணம்தான் என பலமுறை வலியுறுத்தியும், “எனக்கு ஓசி தேவையில்லை” என்று மூதாட்டி துளசியம்மாள் பணம் கொடுத்து பயணம் செய்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ”அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் மூதாட்டியை அழைத்துச் சென்று நடத்துனரிடம் பிரச்னை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்” என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரித்திவிராஜ் ரங்கசாமி தன் முகநூல் பக்கத்தில், “ஆம் நான்தான் பிரித்திவிராஜ். எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்” என்று பதிவிட்டு இருந்தார்.

திமுகவினர் புகார்:

இது தொடர்பாக திமுகவினர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் வேண்டுமென்றே அதிமுகவை சேர்ந்த துளசியம்மாள் பாட்டியை பேருந்து பயணம் செய்ய வைத்து நடந்துநரிடம் தகராறு செய்து, அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக தெரிவித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மூதாட்டி துளசியம்மாள் அதிமுகவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

காவல்துறை வழக்குப்பதிவு:

இதையடுத்து அதிமுகவை சேர்ந்தவர்கள் மீது, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் நடந்து கொள்ளுதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல், அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல், வதந்தி பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாவட்ட எஸ்.பி., விளக்கம்:

இந்நிலையில், மூதாட்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என தகவல் பரவியது. இச்சம்பவம் குறித்து ஏ.பி.பி நாடுவிடம் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தெரிவித்தாவது, மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
களத்தில் இந்திய ராணுவம்.. புதுச்சேரியில் 2 மணி நேரத்தில் 100 பேர் மீட்பு!
சென்னை டூ புதுச்சேரி.. 2 மணி நேரத்தில் களத்திற்கு சென்ற ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட 100 பேர் மீட்பு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Embed widget