எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி - ஆறுகுட்டி
எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோதத்தின் சிரிப்பு தான்.
கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி, கடந்தாண்டு திமுகவில் இணைந்தார். தற்போது கோவை மக்களவை திமுக வேட்பாளர் ராஜ்குமாருக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி இன்று காலை அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் அதிமுகவில் 50 ஆண்டு காலம் பணியாற்றினேன், 2 முறை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வாக இருந்தேன். கடந்த தேர்தலில் போது கூட எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் தனக்கு பணியாற்றுமாறு கோரினார். நானும் வேலை செய்தேன், ஆனால் கட்சி தலைமையில் இருந்து என்னை கொள்ளவில்லை ஓரம் கட்டினார்கள். பிறகு செந்தில் பாலாஜி அழைத்தார், மரியாதை இல்லாத கட்சியில் இருக்க வேண்டாம் என கூறியதை தொடர்ந்து விலகி, பொள்ளாச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இணைந்தேன்.
யார் துரோகி?
அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன். அப்போது அவர்கள் கூவத்தூரில் இருந்தார்கள். ஒரு இயக்கத்தை கையில் எடுத்து அதனை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் ஈடுபட்டுள்ளார். 1986 ல் இருந்து பணியாற்றிய என்னை ஒதுக்கினார்கள். தினகரன் மற்றும் ஒ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இல்லை என்றால், இப்போது அவர் முதல்வர் இல்லை. ஆனால் அந்த 40 பேருக்கும் அவர்கள் வாய்பளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மற்றவர்களை வேடந்தாங்கல் பறவை எனக்கூறினால், அவர் தான் துரோதத்தின் எல்லை. இயக்கத்தை அழிக்க வேண்டும் என இயக்கத்தை கையில் எடுத்துள்ளார்கள். யார் துரோகி என ஒரே மேடையில் பேசத்தயார். உதயகுமாரில் இருந்த அனைவரும் சசிகலா காலில் விழுந்து அமைச்சர்களாக வந்தவர்கள் தான், இல்லை என சத்தியம் போட முடியுமா? வார்டு உறுப்பினர், சேர்மேனாக இருந்து பல்வேறு பணியாற்றியதால் மக்கள் எனக்கு ஆதரவளித்தனர்.
எடப்பாடி பழனிசாமி அரசியல் துரோகி
தற்போது பிரச்சாரத்திற்கு செல்லும் போது முதல்வர் திட்டத்தால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. எடப்பாடியுடன் சேர்ந்து கிளை செயலாளர்கள் கூட துரோகிகளாக மாறிவிட்டார்கள். அந்த கட்சியில் நான்கு பேர் சென்றாலும் உடன் இருப்பவர்களை கவிழ்க்க தான் செல்கிறார்கள். ஆனைக்கட்டியில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைப்பதாக கூறினார்கள். ஆனைக்கட்டியில் இருந்து கோவைக்கு பணிக்கு வரும் பெண்கள் பேருந்துக்கு தினமும் 50 ரூபாய் செலவழித்து வந்தனர். இப்போது இலவச பேருந்தால் அந்த பிரச்சனை இல்லை நல்ல வரவேறல்ற்பு. எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோதத்தின் சிரிப்பு தான். அனைவரும் காலில் விழுந்து பதவி வாங்கி சசிகலாவிற்கே துரோகம் செய்தவர்கள். நான் அதிமுகவில் நெஞ்சை நிமிர்த்தி பணியாற்றியவன், ஜெயலலிதா அம்மா காலில் கூட விழாதவன். நான் கட்சியில் இருந்த போது எந்த துரோகமும் செய்யவில்லை. அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என அதிமுக கூறியது, அதே போல எடப்பாடி நீக்கினால் தான் கூட்டணி பாஜகவும் கூறலாம் தானே” எனத் தெரிவித்தார்