மேலும் அறிய

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் அண்ணாமலை, களத்திற்கு வராத வேலுமணி - கோவையின் இறுதி கட்ட களநிலவரம்

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவையின் இறுதி கட்ட களநிலவரம் என்ன எனப் பார்க்கலாம்.

கோவை மக்களவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுவதாலும், திமுக, அதிமுக கட்சிகள் கோவையை கைப்பற்ற கடுமையாக போராடுவதாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனமும் கோவையின் மீது திரும்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவையின் இறுதி கட்ட களநிலவரம் என்ன எனப் பார்க்கலாம்.

திட்டமிடலுடன் களமாடும் திமுக..

கோவை தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியே தீர வேண்டுமென்ற முனைப்புடன் போட்டியிடும் திமுக, வேட்பாளர் தேர்வு முதல் இறுதிக் கட்ட தேர்தல் பரப்புரை வரை அனைத்தையும் முறையான திட்டமிடலுடன் செய்து வருகிறது. சர்ச்சை இல்லாத படித்தவரும், மேயராக மக்களுக்கு அறிமுகமானவருமான கணபதி ராஜ்குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அண்ணாமலை போட்டியிடுவதால் தொழில் துறையினர் ஆதரவு பாஜகவிற்கு செல்வதை தடுக்கும் வகையில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கோவையின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் உள்ள ஐடி விங்க் ட்ரெண்டிங்கிற்கு ஏற்ப பாஜக எதிர்ப்பை சமூக வலைதளங்களில் முன்னிறுத்தி வருகிறது.

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் அண்ணாமலை, களத்திற்கு வராத வேலுமணி - கோவையின் இறுதி கட்ட களநிலவரம்

திமுகவின் வேட்பாளர் முதல் முதலமைச்சர் வரை அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பாஜக எதிர்ப்பு என்பதை மட்டும் முன்னிலைப்படுத்தி தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர். திமுக பலவீனமாக உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இறுதி நாள் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழுமையாக கோவை தொகுதியில் பரப்புரை செய்ய உள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஆகியவை திமுகவிற்கு சாதகமாக உள்ளன.

அதுமட்டுமின்றி திமுக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிவது திமுகவிற்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இதனோடு இறுதிக்கட்டத்தில் பாஜகவிற்கு வாக்குகள் செல்வதை முடிந்தளவு தடுத்தாலே, வெற்றி பெற்றுவிடலாம் என திமுக திட்டமிட்டுள்ளது. அதேசமயம் கோவையில் திமுக வலிமையாக இல்லாதது, செந்தில் பாலாஜி இல்லாதது, அண்ணாமலையின் நட்சத்திர அந்தஸ்து ஆகியவை திமுகவிற்கு பின்னடைவாக உள்ளன.

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் அண்ணாமலை

கோவையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே பாஜக வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புறங்களில் பாஜகவிற்கு கணிசமான ஆதரவு இருந்தாலும், கிராமப்புறங்களில் பெரியளவில் கட்சி கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. அதனால் பூத் கமிட்டிகள் அமைப்பதிலும் அக்கட்சியினர் தடுமாறினர். அதேசமயம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், அக்கட்சியினர் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

அண்ணாமலை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவர் எனவும், அதனால் கோவைக்கான திட்டங்களை அதிகளவில் கொண்டு வருவார் எனவும் பாஜகவினர் பரப்புரை செய்து வருகின்றனர். அண்ணாமலைக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும், தொழில் துறையினர் மற்றும் பல்வேறு சாதிய அமைப்புகளின் ஆதரவு இருப்பதாகவும் பாஜகவினர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் அண்ணாமலை, களத்திற்கு வராத வேலுமணி - கோவையின் இறுதி கட்ட களநிலவரம்

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்குகள் குறைவாகவே உள்ள நிலையில், கணிசமான புதிய வாக்காளர்கள் மற்றும் தொழில் துறையினர் வாக்குகள் பாஜகவிற்கு வரும் என கூறப்படுகிறது. சிறுபான்மையினர் வாக்குகளை ஈர்ப்பது கடினம் என்பதால், அண்ணாமலை அதிமுக வாக்குகளை குறிவைத்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை அண்ணாமலை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார்.

பிரதமர் மோடியும் அவர்களை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருவதோடு, திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அதிமுகவின் வாக்குகளையும், திமுக எதிர்ப்பு வாக்குகளையும் தன்வசப்படுத்தும் வகையில் பரப்புரை செய்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் நட்சத்திர அந்தஸ்தும், அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பதும் பாஜகவிற்கு சாதகமாக உள்ள நிலையில், அதிமுகவின் வாக்குகளும் செல்லும் பட்சத்தில், அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

களமிறங்காத எஸ்.பி. வேலுமணி

அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கவனம் ஈர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது எளிமையான அணுகுமுறையினால், ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதிமுகவிற்கு கோவையில் உள்ள வாக்கு வங்கியும், கிராமப்புற வாக்காளர்களும் சாதகமாக உள்ளன. அதேசமயம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவையில், அக்கட்சியின் செயல்பாடுகள் போதியளவு இல்லை என கூறப்படுகிறது. வலிமையான கூட்டணி இல்லாதது, பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் போன்றவை சற்று பின்னடைவை தருவதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் அண்ணாமலை, களத்திற்கு வராத வேலுமணி - கோவையின் இறுதி கட்ட களநிலவரம்

அதிமுகவின் முக்கியத் தலைவராக உள்ள எஸ்.பி. வேலுமணி பொள்ளாச்சி தொகுதிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, கோவை தொகுதிக்கு தரவில்லை என சொல்லப்படுகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக நடந்த பூத் கமிட்டி கூட்டங்களில் மட்டுமே தலை தாட்டிய எஸ்.பி. வேலுமணி, பெரிய அளவில் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பிற்கு வரவில்லை எனவும், அதிமுக அணிகள் பிளவுபட்ட போது, ஒபிஎஸ் அணிக்கு சென்ற சிங்கை ராமச்சந்திரனுக்கு எஸ்.பி. வேலுமணியின் முழு ஆதரவு இல்லை எனவும் அக்கட்சியினரால் கூறப்படுகிறது.

அதிமுக தலைமை மீது கடும் விமர்சனங்களை வைத்து வரும் அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில், இறுதிக்கட்டத்தில் எஸ்.பி.வேலுமணி களமிறங்கினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மும்முனை போட்டியில் யார் முந்துவது, யார் யாருக்கு எந்த இடம், என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget