மேலும் அறிய

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் முன்கூட்டியே திட்டமிட்டது - எடப்பாடி பழனிசாமி

”எதிர்கட்சிகள் கூட்டம் நடத்தியதற்காக நாங்கள் கூட்டம் நடத்தவில்லை. இந்த கூட்டம் முன்கூட்டியே திட்டமிட்டு தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் எல்லோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது”

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டமைப்பு அந்த கூட்டத்தை கூட்டியது. அதில் இடம்பெற்றிருக்கின்ற அனைத்து கட்சிகளும் கூடி கருத்துகளை தெரிவித்தோம். எதிர்கட்சிகள் கூட்டம் நடத்தியதற்காக நாங்கள் கூட்டம் நடத்தவில்லை. இந்த கூட்டம் முன்கூட்டியே திட்டமிட்டு தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் எல்லோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடி மீது 11 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கில் சோதனை நடைபெற்றுள்ளது. அமலாக்கத்துறை தாமதமாக சோதனைக்கு வந்துள்ளனர். அதிமுகவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை, புதுப்பித்தல் பணிகள் நடைபெறும். அதிமுகவில் 1 கோடியே 70 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். எங்களது இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஆங்காங்கே துவங்கியிருக்கிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2 ஆண்டுளாக புறக்கணிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் மையமாக வைத்து தான் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தை அறிவித்து 4 மாதங்களாகியும் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கவில்லை. இத்திட்டத்திற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்குவதாக வாக்குறுதி அளித்தனர். அரசின் அறிவிப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, ”கட்சியினரை ஊக்கப்படுத்த எல்லா கட்சி தலைவரும் சொல்வது தான். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுக தான். 2019, 2021 தேர்தல்களை போல கூட்டணி தலைமையாக அதிமுக தொடரும். யாருக்கு எவ்வளவு சீட் என்பதை இப்போது சொல்ல முடியாது. கூட்டணி கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்பட்டு தெரிவிக்கப்படும்” எனப் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “குடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. குடிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. அதனால் மதுபானம் விலை உயர்வு பற்றி எனக்கு தெரியாது. அது குறித்து துறை சார்ந்த அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு தான். ஸ்டாலின் ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டாலினை வெயிட்டாக கவனித்துள்ளார். அவர் ஏதாவது சொல்லிவிடுவாரோ எனப் பயந்து மிரண்டு போய் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் சந்தித்தனர். ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் போயிருக்கின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல் துறை உயரதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், சாதாரண காவலர்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். டிஐஜி தற்கொலை விவகாரத்தில் மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்.ஜவுளி தொழில் நலிவடையும் சூழல் உள்ளது ஸ்பின்னிங் மில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக அரசு தீர்வு காணவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget