மேலும் அறிய

Coimbatore: மகன்களுடன் குப்பை அள்ளிய திமுக கவுன்சிலர் - மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

5 நாட்களாக குப்பை அள்ளவில்லை என்பதால், மனமுடைந்த திமுக கவுன்சிலர் மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 5 நாட்களாக குப்பை அள்ளவில்லை என்பதால், மனமுடைந்த திமுக கவுன்சிலர் மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதற்கு தலைவராக மெஹரீபாபர்வீன், துணைத் தலைவராக அருள் வடிவு ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டில் திமுக நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத் பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல், குடிநீர் விநியோகம் முறையாக வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து தரக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் வார்டு உறுப்பினர் ஜம்ரூத்பேகம் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் நகராட்சி தலைவர் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே இவரது வார்டில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வார்டு பகுதியில் உள்ள மக்கள் இவரது வீட்டிற்கு சென்று இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜம்ரூத் பேகம் மற்றும் இவரது மகன்கள் ஆகியோர் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே ஒரு வார்டு உறுப்பினர் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை எடுக்காததால் தனது மகன்களுடன் சேர்ந்து குப்பைகளை எடுத்ததை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget