மேலும் அறிய

'தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது; பாஜகவை நம்பி ஏமாந்து விடாதீர்கள்' - கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

"ஒன்றிய பாஜக அரசால் விலையேற்றம், நிதி அளிப்பதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. இதையெல்லாம் மறந்துவிடக்கூடாது. உங்களிடம் நிறைய பொய் சொல்லி வருவார்கள்"

இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாப்புதூர் பகுதியில் இருந்து கணபதி ராஜ்குமார் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மலர் தூவி வேட்பாளரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் திமுக அரசின் சாதனை கூறி உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து அரிபுரம், சின்னசாமி நாயுடு சாலை, காந்திபுரம், அலமு நகர், பாலாஜி நகர், மட்டசாலை, செங்காடு, காந்தி மண்டபம், காய்கடை சந்திப்பு, பாப்பநாயக்கன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்குகளை சேகரித்தார்.

அரிபுரம் பகுதியில் கணபதி ராஜ்குமார் வாக்குகேட்டு பேசுகையில், “இந்தியா கூட்டணி சார்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்புமிகு தமிழக முதல்வரால், கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இங்கு வாக்குகளை சேகரிக்க வந்துள்ளேன். இந்தப் பகுதியை எனக்கு நன்கு தெரியும். நான் இங்கே வடக்கு மாமன்ற தலைவராக பணியாற்றிய காலம் முதற்கொண்டு, நன்கு அறிவேன்.  திமுக அரசு செய்த, செய்கின்ற சாதனைகளை எல்லாம் கூறி நாங்கள், வாக்குகள் சேகரித்து வருகின்றோம். நமது முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு, கடந்த  தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமல்ல, அறிவிக்காத வாக்குறுதிகளையும் செய்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை  விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கிடைக்கப்பெறும்.

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது; பாஜகவை நம்பி ஏமாந்து விடாதீர்கள்' - கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது

திமுக அரசின் சாதனைகளைக் கூறி தான் உங்களிடம் வாக்குகளை சேர்த்து வருகின்றோம். ஆனால் எதிரணியில் இருக்கக்கூடிய வெளியூரை சேர்ந்த வேட்பாளர்களுக்கு எல்லாம் அரிபுரம் தெரியாது. இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாது. அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள், கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம், பெட்ரோல் - டீசல் விலையேற்றம், கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவார்களா? இதை நம்ப முடியுமா? பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்பார்கள், அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஒன்றிய பாஜக அரசால் விலையேற்றம், நிதி அளிப்பதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. இதையெல்லாம் மறந்துவிடக்கூடாது. உங்களிடம் நிறைய பொய் சொல்லி வருவார்கள், இதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வீடுகள் வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பட்டாவோ, அல்லது வேறிடத்தில் வீடோ உங்களுக்கு  ஏற்பாடு செய்வதற்காக அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிந்தவுடன் முழு வீச்சில் அதை செய்து கொடுப்போம் என்பதை நாங்கள் உத்திரவாதம் கொடுக்கின்றோம். நாங்கள் என்றைக்கும் கூட இருப்போம். நான் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கின்றேன். மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என முதல்வர் உத்திரவிட்டுள்ளார்.  அதனால் உங்களிடத்தில் தான், நாங்கள் இருப்போம், உங்கள் குறைகளை தீர்த்து வைப்போம்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!
'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!
Embed widget