Watch Video : 'என்னை விட்டுட்டு போகாதீங்க' - உரிமையாளருடன் செல்ல சண்டையிடும் நாயின் க்யூட் வீடியோ
”வெளியே போலமா” என காசியின் மகள் கேட்ட போது, முன்னங்கால்களை தூக்கி துள்ளியபடி வீரா தன்னை வெளியே அழைத்துச்செல்லும்படி செல்லமாகவும் கோபமாகவும் செயலைச் செய்துள்ளது.
கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் காசி. இவரது குடும்பத்தில் வீரா என்ற பொமரேனியன் நாயும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. பின்னங்கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் இருந்த இந்த நாயினை, ஆதரவற்ற நாய்களை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்தில் இருந்து காசி தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மற்ற நாய்களை போல வீரா நடக்க முடியாமல் மன வருத்தத்தில் இருப்பதை அறிந்து, அதனை போக்கும் வகையில் பிரத்யேகமான நடை வண்டி ஒன்றை காசி உருவாக்கினார். அந்த நடை வண்டி மூலம் வீராவிற்கு நடை பயிற்சி அளித்து, நடக்கச் செய்துள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரும் காசிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் குட்டி வீராவிடம், வண்டியை கையில் எடுத்து ’வெளியே போகலாம் வா’ காசியின் மகள் கூறியுள்ளார். அதற்கு நாய் குட்டி வீராவை தயாரான நிலையில், அவர் சற்று நேரம் தாமதம் செய்துள்ளார். அப்போது ”வெளியே போலமா” என காசியின் மகள் கேட்ட போது, முன்னங்கால்களை தூக்கி துள்ளியபடி வீரா தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி செல்லமாகவும் கோபமாகவும் செய்கை செய்துள்ளது. ”இரு... இரு... போலமா?, செருப்பு போட விடு. ஒரு நிமிடம்” என்று சொன்ன போது, தொடர்ந்து கால்களை தூக்கியபடி துள்ளியது. ”என்ன மிரட்டுற?” எனக் கேட்டபோது, அதற்கு பதில் அளிக்கும் வகையில் வீரா குரைத்தது. இந்தக் காட்சிகளை காசி அவரது செல்போனில் பதிவு செய்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
வீரா ரசிகர்களுக்காக:
— Kasi காசி (@akaasi) March 17, 2022
வண்டியைக் கையில் எடுத்து 'வெளியே போகலாம் வா' என்று சொன்னதற்கு அவன் குதித்த குதி! 😄☺️ pic.twitter.com/qC4Mkl92xW
இது குறித்து காசி கூறுகையில், ”எனது மகள் நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த நாய் குட்டியை வீட்டில் வளர்த்த விருப்பப்பட்டு இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தங்களின் குடும்பத்தில் ஒருவராக நாய்க்குட்டி வீரா இருக்கிறது. எனது மகள் வண்டியை கையில் எடுத்து வெளியே போகலாம் வா என்று சொன்னதற்கு வீரா குதியோ குதி என குதித்தான். வீராவிற்கு என ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்காக அந்த காட்சிகளை பதிவு செய்தேன்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்