கோவையில் ஒரேநாளில் 3309 உறுதியான பேருக்கு கொரோனா தொற்று ; 5 பேர் உயிரிழப்பு..!
கோவையில் கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. கோவை தினசரி பாதிப்பில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 139 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவையில் இன்று 3309 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 27086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 3684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 689 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2563 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு,, திருப்பூர்,, நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் இன்று 1198 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 63 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 8659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 124885 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 115501 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 725 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1649 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 130 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 1014 பேர் குணமடைந்துள்ள நிலையில், 11380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 119297 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 106879 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1038 ஆக அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 236 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 14 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 215 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 40001 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37445 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 223ஆக உள்ளது.