மேலும் அறிய

கோவையில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 156 பேருக்கு கொரோனா தொற்று

கோவையில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 28 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இன்று தினசரி தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு இரண்டாவது இடத்திலும், திருவள்ளூர் மூன்றாவது இடத்திலும் உள்ள நிலையில், கோவை நான்காவது இடத்தில் உள்ளது.

கோவையில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 28 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 507 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2617 ஆக உள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 14 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 133295 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 132306 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 734 ஆகவும் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 6 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 23 பேர் குணமடைந்துள்ளனர் . கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 130373 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 129153 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1052 ஆக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 9 பேர் குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 42414 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42114 ஆகவும் உள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 226 ஆக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Embed widget