மேலும் அறிய

கோவை : குறைந்துவரும் கொரோனா தொற்று எண்ணிக்கை.. நிம்மதி பெருமூச்சுவிடும் மக்கள்..

கோவையில் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 10 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது.

கோவையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 10 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 28 ஆயிரத்து 495 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2617 ஆக உள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 8 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 132997 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 132058 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 734 ஆகவும் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 11 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 16 பேர் குணமடைந்துள்ளனர் . கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 130180 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 128991 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1052 ஆக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 4 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 4 பேர் குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 42328 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42040 ஆகவும் உள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 226 ஆக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
PM Modi On Pakistan: பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
IND vs ENG: பவுலிங் பயங்கரம்! சுருண்டு போன பட்லர் பாய்ஸ்! பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா
IND vs ENG: பவுலிங் பயங்கரம்! சுருண்டு போன பட்லர் பாய்ஸ்! பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
PM Modi On Pakistan: பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
IND vs ENG: பவுலிங் பயங்கரம்! சுருண்டு போன பட்லர் பாய்ஸ்! பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா
IND vs ENG: பவுலிங் பயங்கரம்! சுருண்டு போன பட்லர் பாய்ஸ்! பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Arshdeep Singh: என் ஓவர்லயே அடிக்குறியா? அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்டை பழிவாங்கிய அர்ஷ்தீப்சிங்!
Arshdeep Singh: என் ஓவர்லயே அடிக்குறியா? அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்டை பழிவாங்கிய அர்ஷ்தீப்சிங்!
TVK slams seeman :
TVK slams seeman : "திரள்நிதி, கட்டுத்தொகை, உளறல்.." சீமானை கிழித்து தொங்கவிட்ட தவெக
Trump on GAZA Again: விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
Embed widget