மேலும் அறிய

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா தொற்று..!

கோவை மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 232 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 386 பேராக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2283 ஆக உள்ளது.

ஈரோடுதிருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோட்டில் இன்று 117 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 99312 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97397 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 661 ஆக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 81 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 11 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 51 பேர் குணமடைந்துள்ள நிலையில், 808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 90982 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89239 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 37 பேர் குணமடைந்துள்ள நிலையில், 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 31986 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31491 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 195 ஆக உள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Pump Industry: ‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!
‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sethupathi: வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர் - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர் - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
TN Weather News: 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
சிஎம் விஜய் பெயரில் ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்
சிஎம் விஜய் பெயரில் ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்
CM Vijay: ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
Embed widget