DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? என்று விஜய்க்கு திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. தவெக ஆட்சியைப் பொறுத்தமட்டில் அவர்கள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ்:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் மொத்த தமிழ்நாட்டையும் அதிரவைத்தது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி கெளரி கொந்தளிப்புடன் பேசியுள்ளார். அவர் பேசியுள்ள வீடியோவை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளதாவது,
பயமா?
தமிழ்நாட்டில் பெண் ஆட்சியருக்கே தவெக MLA-வால் பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது எனவும், அதற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் நீதிபதி அவர்களே எடுத்துரைக்கும் அளவிற்கு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது. பெண்கள் வேலைக்குப் போகும் இடத்தில் பாதுகாப்பாக இல்லை என்று மேடையில் பேசுனீர்களே விஜய், உங்கள் கட்சியின் MLA மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்று பயமா டம்மி அவர்களே?
— DMK IT WING (@DMKITwing) November 22, 2026
தமிழ்நாட்டில் பெண் ஆட்சியருக்கே தவெக MLA-வால் பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது எனவும், அதற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் நீதிபதி எடுத்துரைக்கும் அளவிற்கு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது.
பெண்கள் வேலைக்குப் போகும் இடத்தில் பாதுகாப்பாக இல்லை என்று மேடையில் பேசுனீர்களே விஜய், உங்கள் கட்சியின் MLA மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்று பயமா டம்மி அவர்களே?
இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
விஜய்க்கு தலைவலி:
தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் விஜய்க்கு எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சி மீது சட்டம் ஒழுங்கு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் விரைவில் எஞ்சியுள்ள 6 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள நிலையில், தவெக அதன் மீது முழு கவனத்தைச் செலுத்தி வருகிறது.
ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள், எம்எல்ஏ-க்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் போன்ற பல்வேறு விவகாரங்கள் ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கி வருகிறது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான விமர்சனத்திற்கு முதல் நாள் துணை சபாநாயகர் ரவிசங்கர் தொகுதிவாசி ஒருவரைத் தாக்கிய விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபத்தை உண்டாக்கியது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் மாமல்லபுரத்தில் எம்எல்ஏ-க்களை வரவைத்த முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கையை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















