மேலும் அறிய

Vanathi srinivasan: திமுகவினர் குறித்து அவதூறாக பேசியதாக வானதி சீனிவாசன் மீது புகார்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துசன் கேவலமாக பேசிய வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் திமுகவினர் குறித்து அவதூறாக பேசியதாக வானதி சீனிவாசன் மீது காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை திருச்சி சாலையில் உள்ள சுந்தரேசன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், திமுகவில் கோவை மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணியில் துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மீது கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் சரவணன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், கோவை மாவட்ட பாஜக சார்பில் வி.கே.கே. மேனன் சாலையில் நடந்த பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், வானதி சீனிவாசன் திமுகவில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாக புகார் தெரிவித்துள்ளார்.

’திமுக கவுன்சிலர்கள் ஆனாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள். திராவிட முன்னேற்ற கழகத்திற்கு என ஒரு பண்பாடு வைத்துள்ளார்கள். அவர்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் என்றும், இது திமுக உறுப்பினர்களின் ஜீன் அது. பாஜகவினரை அக்மார்க் என சொல்லலாம். ஒரே வீட்டில் தான் இருப்பார்கள்’ என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்கள் என தவறாக சித்தரிக்கும் உள்நோக்கத்துடன் பொதுவெளியில் பேசியதாக தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசனின் பேச்சு திமுகவினரை கேவலப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனால் ஒட்டுமொத்த திமுகவினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறிய அவர், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துசன் கேவலமாக பேசிய வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut (13-07-2026): முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
coimbatore power cut: கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget