மேலும் அறிய

Thiruvalluvar Statue: கோவையின் புதிய அடையாளம்; தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை நாளை திறப்பு

தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட 20அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு உடன், கோவை மாநகரில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குளங்களின் கரைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.62.17 கோடி மதிப்பில் உக்கடம் பெரியகுளம், ரூ.67.86 கோடி மதிப்பில் வாலாங்குளம், ரூ.31.25 கோடி மதிப்பில் செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், ரூ.19.36 கோடி மதிப்பில் கிருஷ்ணாம்பதி குளம், ரூ.52.16 கோடி மதிப்பில் குறிச்சி குளம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் 340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டன. தினமும் ஏராளமானோர் குளக்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குளத்தின் பல்வேறு இடங்களில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிச்சி குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் திறந்தவெளி அரங்கம் போல ‘செல்ஃபி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரத நாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Thiruvalluvar Statue: கோவையின் புதிய அடையாளம்; தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை நாளை திறப்பு

இந்த திருவள்ளுவர் சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில சொற்களும் இடம் பெறும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில், துருப்பிடிக்காத வகையில் ஸ்டீலால் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதனையடுத்து குளத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதேபோல கோவை மாநகராட்சி சார்பில் குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார சின்னங்கள், பெரியகுளக்கரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனுபவ மையம் கட்டமைப்பு, ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகியவை நாளை பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Embed widget