மேலும் அறிய

"கிக் பாக்சிங்கில் கோவை மாணவர்கள் கோல்டன் வேட்டை" - 20 தங்கம் வென்று சாதனை...

சென்னையில் நடைபெற்ற தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் 20 தங்கம் உட்பட 39 பதக்கங்களை வென்ற கோவை மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 20 தங்கம் உட்பட மொத்தம் 39 பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவை மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐ.எஸ்.கே.ஏ. சர்வதேச கராத்தே விளையாட்டு சங்கம் சார்பில் தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மே 28ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் சென்னை நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அணி சார்பில் கோவை துடியலூரில் செயல்பட்டு வரும் ஆண்ட்லி பிளாக் பெல்ட் அகாடமியில் பயிற்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். ஃபார்ம்ஸ், பாயிண்ட் ஸ்பேரிங், லைட் கான்டாக்ட் மற்றும் லோ கிக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவர்கள் 20 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 39 பதக்கங்களை கைப்பற்றினர்.

போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் இணைந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து அவர்களின் சாதனையை கொண்டாடினர்.

இதுகுறித்து ஆண்ட்லி பிளாக் பெல்ட் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்லி கூறுகையில், தமிழக மாணவர்கள் கிக் பாக்சிங் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார். மேலும், புதிய அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, கிக் பாக்சிங் உள்ளிட்ட தற்காப்புக் கலை விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Embed widget