மேலும் அறிய

கோவை : "அம்மா, அப்பா என்று அழைக்க எனக்கு தகுதியில்லை" - நீட் தேர்வு எழுதிய மாணவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயம்..

கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்துவிடுவோம் என்ற பயத்தில் கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நீட் தேர்வு பயத்தினால் மாணவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கெந்தரை கிராமத்தை சார்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் மாதன். இவரது மனைவி அம்பிகாவதி. இவர்களுக்கு  19 வயதில் விக்னேஷ் என்ற மகன் உள்ளார். விக்னேஷ் 12ம் வகுப்பு படித்து விட்டு, நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வு எழுதுவதற்காக தனது தாய்  அம்பிகாவதியுடன், விக்னேஷ் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள விஜயலட்சுமி நகரில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். கடந்த வருடம் எழுதிய நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இதனை அடுத்து கடந்த 12-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் தேர்வை விக்னேஷ் எழுதியுள்ளார். இதையடுத்து வீட்டில் விக்னேஷ் சோகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம்  வீட்டில் இருந்து விக்னேஷ் திடீரென வெளியேறினார். விக்னேஷ் வீட்டில் இல்லாததால், அவரது தாயார் அம்பிகாவதி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது படுக்கையறையில்  விக்னேஷ் பன்னிரண்டு முப்பது மணிக்கு தனது டைரியில் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது.

அதில், “அப்பா அம்மாவிற்கு நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் குடுக்க இயலாது. இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம்தான் உண்மையை கூற எனக்கு பயமாக இருக்கிறது. இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கோ, உங்களை அப்பா அம்மா என்று அழைப்பதற்கோ எனக்கு தகுதி இல்லை. சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் வீட்டை விட்டு செல்ல முடிவு செய்துள்ளேன். இன்று நான் என் வெற்றிப் பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன். என்னை தேட வேண்டாம். இன்னும் சில வருடங்களில் திரும்பி வருவேன் வெற்றி பெற்றவனாக இது சத்தியம். இப்படிக்கு உங்கள் அன்பு மகன்” என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது தாயார் அம்பிகாவதி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். மாணவர் எழுதி வைத்த கடித்தத்தை கைப்பற்றி, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் காணாமல்போன மாணவன் விக்னேஷை தேடி வருகின்றனர். கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்து விடுவோம்  என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
coimbatore power cut: கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை
வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை
coimbatore power cut: கோவையில் நாளை (24-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (24-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
Perungalathur Road Over Bridge: 2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
Embed widget