சாதாரண தேநீராக இல்லாமல் ஆரோக்கியம் நிறைந்த டீயாக பருகலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

இஞ்சி டீ

இஞ்சி உடலுக்கு மிகவும் நல்லது. இஞ்சியை தட்டி அதை தேநீரில் கலந்து பருகினால் உடலுக்கு மிகவும் நல்லது ஆகும்.

Image Source: Canva

செம்பருத்தி டீ

செம்பருத்தி ஏராளமான நன்மைகளை கொண்டது. அதன் இதழ்களில் ஏராளமான ஆரோக்கியம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Image Source: Canva

புதினா டீ

உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது புதினா. அஜீரண கோளாறை சரிசெய்யும் வல்லமை கொண்டது புதினா.

Image Source: Canva

துளசி டீ

சளி, இருமல் பிரச்சினைகளை நீக்கியும், உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் தருவது துளசி. இதன் இலைகளை தேநீரில் கலந்து பருகினால் மிகவும் நல்லது ஆகும்.

Image Source: Canva

இலவங்கப்பட்டை டீ

இலவங்கப்பட்டை நல்ல நறுமணம் மிக்கது. இது சுவாசக்கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. இதை தேநீரில் கலந்து பருகுவது நன்மை ஆகும்.

Image Source: Canva

சாமந்தி டீ

சாமந்தி பூ மாதவிடாய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது. பல மருத்துவ குணம் கொண்ட இதை தேநீரில் சேர்த்து பருகலாம்.

Image Source: Canva

மஞ்சள் தேநீர்

மஞ்சள் போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருள் எதுவும் இல்லை. சிறந்த மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை ஏதுவான அளவு கலந்து பருகினால் நோய் நம்மை நெருங்காது.

Image Source: freepik

லாண்டர் டீ

லாவண்டர் பூ கலந்து பருகும் தேநீர் லாவண்டர் டீ என்று அழைக்கப்படுகிறது. இதை தமிழில் இலவங்க தேநீர் என்றும் கூறுவார்கள். இது புத்துணர்ச்சியை அளிக்கும்.

Image Source: Canva