Pocso Act: கோவையில் பள்ளி மாணவியின் நிர்வாண வீடியோ காட்டி மிரட்டல் - சிறுவன் மீது போக்ஸோ வழக்கு
மாணவியை அவர் காதலிப்பதாக தெரிவித்து ஆசை வார்த்தைகள் கூறினார். அதனை நம்பி மாணவியும் அந்த சிறுவனுடன் பேசி வந்தார். போனில் பேசி வந்த அவர்கள் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமும் பேசி பழகி வந்ததாக தெரிகிறது.
![Pocso Act: கோவையில் பள்ளி மாணவியின் நிர்வாண வீடியோ காட்டி மிரட்டல் - சிறுவன் மீது போக்ஸோ வழக்கு Coimbatore pocso case registered against boy for showing obscene video of schoolgirl Pocso Act: கோவையில் பள்ளி மாணவியின் நிர்வாண வீடியோ காட்டி மிரட்டல் - சிறுவன் மீது போக்ஸோ வழக்கு](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2016/10/22123917/3-WhatsApp-Video-Calling-Feature-Launched-But-Dont-Get-Excited.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்த போது, இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் இருந்தது. அந்த மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டார். அதன் பிறகும் மாணவியிடம் செல்போனில் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். மாணவியை அவர் காதலிப்பதாக தெரிவித்து ஆசை வார்த்தைகள் கூறினார். அதனை நம்பி மாணவியும் அந்த சிறுவனுடன் பேசி வந்தார். போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் நாளடைவில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமும் பேசி பழகி வந்ததாக தெரிகிறது. வீடியோ காலில் பேசும் போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்தார். ஆனால் மாணவி மறுப்பு தெரிவித்து நாட்களை கடத்தினார்.
ஒரு கட்டத்தில் சிறுவனின் தொல்லை தாங்காமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசியதாக தெரிகிறது. அந்த காட்சிகளை சிறுவன் செல்போனில் பதிவு செய்து கொண்டான். இதையறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகினார். அதன்பிறகு மீண்டும் ஒருநாள் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு சிறுவன் கூறி இருக்கிறான். ஆனால் மாணவியோ இனிமேல் நான் அப்படி வீடியோ காலில் வர மாட்டேன் என பிடிவாதமாக கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், நீ ஏற்கனவே ஒருமுறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்துள்ளேன். நீ இப்போது அப்படி வரவில்லை என்றால் இந்த காட்சிகளை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டினார். மேலும் அடுத்த நிமிடமே மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்தான். அதனை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
நிலைமை விபரீதமானதை உணர்ந்த மாணவி, பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பிரச்சினையை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை கண்டித்ததுடன் கோவை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் செய்தனர். இதையடுத்து 16 வயது சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவி, தன்னுடன் பழகிய சிறுவன் எந்த ஊர் என்று கூட அறியாமல் அவருடன் நெருங்கி பழகி உள்ளார். அதனால் அவர் எந்த ஊர் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)