மேலும் அறிய

மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்கு - காரணம் என்ன?

கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்கு  -  காரணம் என்ன?

இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து முதலீட்டாளர்கள் கூறும் போது, ”நாங்கள் முதலீடு செய்யவில்லை. பணம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளோம். இந்த நிறுவனத்தினால் பலரது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தினால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. யாரையும் மோசடி செய்யவில்லை. ஆனால் மோசடி செய்ததாக பொய் புகார் அளித்து இந்த நிறுவனத்தை மூடப்பார்க்கிறார்கள். இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்எனத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாச்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாச்சியர் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது இடத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Embed widget