மேலும் அறிய

மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம் ; 9 ஆயிரம் கோடி உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு மின் பயனீட்டாளர் கூட்டமைப்பை சேர்ந்த தொழில் அமைப்பினர் வரும் 25ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் பேனல் அமைக்க துணை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மின் பயனீட்டாளர் கூட்டமைப்பை சேர்ந்த தொழில் அமைப்பினர் வரும் 25ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதேபோல கோவையில் உள்ள மற்றொரு பெரிய தொழில் கூட்டமைப்பான தமிழ்நாடு தொழில் தொழில் அமைப்பினரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருவதாகவும், கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை எனவும், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். மின் கட்டண உயர்வால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து வருவதாகவும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன்படி ஒன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 350 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பும், 2500 கோடி ரூபாய் அளவிற்கு அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்படும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் 8 இலட்சம் தொழிற்கூடங்கள் பங்கேற்று இருப்பதாகவும், 90 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேபோல கோவையில் 50 ஆயிரத்தும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பதால், 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “மின் கட்டணம் தொடர்பான 5 கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு உடனடியாக இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget