மேலும் அறிய

பொங்கல் வாழ்த்து சுவரொட்டி ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் ; சீமான் கண்டனம்

நீலிகோணம் பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆசிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் பொங்கல் வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்டிய போது அங்கு வந்த சிலர் இருவரையும் தாக்கி உள்ளனர்.

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை தாக்கியவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்நீலிகோணம் பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆசிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் பொங்கல் வாழ்த்து சுவரொட்டிகளை நேற்று நள்ளிரவில் ஒட்டி வந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த சிலர் இருவரையும் தாக்கி உள்ளனர். கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் புகார் அளிப்பதற்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும்!@CMOTamilnadu @mkstalin

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கினியத்தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும்… pic.twitter.com/TdVkuZjw74

— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 14, 2024

">

நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒழுங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும்  நீலிகோணம்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டச் சென்றபோது அப்பகுதியைச் சார்ந்த பாஜகவினர் சிலர், இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளச் செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
சாதி, மதங்களைக் கடந்து தமிழிளந் தலைமுறை பிள்ளைகள் தமிழர்களாக ஒன்றுபட்டு பெருமளவில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததே பாஜகவினர் செய்துள்ள இக்கோழைத்தனமான கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணமாகும். தமிழர் ஓர்மையைச் சீர்குலைத்து, மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபமடையத் துடிக்கும் பாஜகவின் இழிவானச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறைச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் தமிழ்நாட்டில் பாஜக வரவிடாமல் தடுக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா? உண்மையில் இந்துத்துவ அமைப்புகளுக்கு திமுக அரசு தரும்  மறைமுக ஆதரவே மாற்றுக்கட்சியினரைத் தாக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாஜக வளர முக்கியக் காரணமாகும். ஆகவே, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினரை உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் விரைந்து நலம்பெற விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Embed widget