மேலும் அறிய

கோயம்புத்தூரில் கொரோனா ஆலோசனை மையமாக மாறிய பள்ளிவாசல்

கொரோனா பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதகளை பின்பற்றி பள்ளிவாசலில், தற்போது தொழுகைகள் நடைபெறுவதில்லை. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு பயனளிக்கும் விதமாக ஜீதா பள்ளிவாசல் கோவிட் 19 ஆலோசணை மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவும் வகையில் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் ஹீதா பள்ளிவாசல்  கொரோனா ஆலோசணை மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேச மயம் இரண்டாவது அலையின் தாக்கமும் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. 

கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு ஆக்சிஜன் வசதி மிகவும் அவசியமாக உள்ளது. இதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பி விட்டன. இதனால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எந்த மருத்துவமனையில் படுக்கைகள் காலியாக உள்ளன என்ற விபரங்களை அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

கோயம்புத்தூரில் கொரோனா ஆலோசனை மையமாக மாறிய பள்ளிவாசல்

இந்நிலையில் கோவை கரும்புக் கடை பகுதியில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதுல் ஹீதா பள்ளிவாசல், கோவிட் 19 ஆலோசனை மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. ஜமா அத்தே இஸ்லாஅமி ஹிந்த் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறித்த விபரங்கள், மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு, மருத்துவர்களுடான கலந்தாய்வுகள், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படுகின்றன.

கோயம்புத்தூரில் கொரோனா ஆலோசனை மையமாக மாறிய பள்ளிவாசல்

இதுகுறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயலாளர் சபீர் அலி கூறுகையில், ”கொரோனா பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிவாசலில், தற்போது தொழுகைகள் நடைபெறுவதில்லை. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு பயனளிக்கும் விதமாக ஜீதா பள்ளிவாசல் கோவிட் 19 ஆலோசணை மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு படுக்கைகளை எப்படி பெறுவது, ஆக்சிஜன் கிடைக்குமா என பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதற்கு உரிய வழிகாட்ட பள்ளிவாசலின் தரைத்தளம் ஆலோசனை மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசலில் இரண்டு விதமான சேவைகள் செய்யப்படுகின்றன. தகவல் மையத்திற்கு அழைப்பவர்களுக்கு மருத்துவமனை, படுக்கைகள், ஆக்சிஜன் தேவை குறித்த விபரங்கள் வேண்டுவோருக்கு, எங்களது தொடர்பின் மூலம் அத்தகவல்களை பெற்று அரை மணி நேரத்திற்குள் வழங்கி வருகிறோம். இங்கு 8 பேர் 2 ஷிப்ட்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக இயங்கி வரும் இந்த தகவல் மையத்திற்கு நாள் ஒன்றுக்கு 50 அழைப்புகள் வருகின்றன. எங்களது வழிகாட்டுதலால் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.

கோயம்புத்தூரில் கொரோனா ஆலோசனை மையமாக மாறிய பள்ளிவாசல்

இதேபோல கொரோனா பயம் மற்றும் தனிமை ஆகியவை மன அழுத்தத்தை தருவதால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கான ஆலோசனைகள் பெறவும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் உள்ள நிபுணத்துவம் பெற்ற 2 மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் மன அழுத்ததில் இருந்து மீண்டு வர ஆலோசணை வழங்கி வருகின்றனர். நேரில் வர முடியாதவர்களுக்கு போன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவது தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்படுவோருக்கு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உதவும் வகையில் அலோபதி, சித்தா, ஹோமியோ ஆகியவற்றை சேர்ந்த 69 மருத்துவர்கள் உள்ளனர். நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே  போன் மூலம் தொடர்புப ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவிற்கு எதிரான எங்களது பணியில் மொத்தம் 74 பேர் பணியாற்றி வருகின்றனர். இதற்கான செலவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இம்மையம் வருகின்ற 24 ம் தேதி அரசு அதிகாரிகளால் திறக்கப்பட்டு முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். இதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ஆகியவையும் எங்களது அமைப்பு சார்பில் வழங்கி வருகிறோம்.” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
Embed widget