மேலும் அறிய

’மின்கட்டணத்தை குறைக்காவிட்டால் தேர்தலில் போட்டியிடுவோம்’ - கோவை தொழில்துறையினர் அறிவிப்பு

”கோரிக்கையை புறக்கணிக்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பிரதிநிதிகளை அழைத்து தேர்தல் புறக்கணிப்பு சம்பந்தமாகவும் அல்லது 40 தொகுதிகளிலும் தொழில் முனைவோர்களை வேட்பாளர்களாக நிறுத்துவோம்”

மின்சார நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பலகட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனை கூட்டம் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நிலை மின் கட்டணம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் நிறைவில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நிலை மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண குறைப்புகளை அரசு அறிவிக்கவில்லையென்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டம் நடத்தி  பெரும்பான்மையான அமைப்புகள் என்ன முடிவு எடுக்கிறதோ அதை கேட்பது அல்லது 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என இரண்டில் ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறையினர்,  எங்களுடைய நிலை மின் கட்டணம் சம்பந்தமான பிரச்சனைக்கு அரசு இது நாள்வரை செவிசாய்க்கவில்லை எனவும், இந்நிலையில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுடைய பிரதான பிரச்சனையான நிலை மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பு தமிழக அரசு எங்களுடைய இந்த கோரிக்கையை புறக்கணிக்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பிரதிநிதிகளை அழைத்து தேர்தல் புறக்கணிப்பு சம்பந்தமாகவும் அல்லது 40 தொகுதிகளிலும் தொழில் முனைவோர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது சம்பந்தமாகவும் ஒரு கூட்டம் நடத்தி அதில் முடிவெடுக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும்  எங்களுடைய ஐந்தாம் கட்ட போராட்டத்தின் பொழுது அரசு தங்களை அழைத்து பேசி எங்களுடைய 50 சதவிகித கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த அவர், இன்னும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் முக்கியமாக நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 430 சதவிகிதம் பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு மாதம்தோறும் கட்டணம் வசூலிப்பது சரி இல்லை என்று அமைச்சர்களே ஒப்புக் கொண்டிருந்தாலும் மின்சார வாரியத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் லகானி தமிழ்நாட்டில் உள்ள குறு சிறு தொழில்களை கண்டாலே வெறுப்பது போல் அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Breaking News LIVE: கிருஷ்ணகிரி அருகே கவிழ்ந்த பேருந்து; 40 பேர் படுகாயம்
Breaking News LIVE: கிருஷ்ணகிரி அருகே கவிழ்ந்த பேருந்து; 40 பேர் படுகாயம்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Embed widget