மேலும் அறிய

Free Tomato: மீன் வாங்கினால் தக்காளி இலவசம்; கோவையில் 2 நாட்களுக்கு ஆஃபர் தந்த மீன் கடைக்காரர்

தக்காளி விலை உயர்வு காரணமாக மீன் மார்கெட்டிற்கு மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தக்காளி இலவசமாக கொடுப்பதாக உரிமையாளர் ஜாபர் தெரிவித்தார்.

கோவையில் மீன் வாங்கினால் கால் கிலோ தக்காளி இலவசமாக இரண்டு நாட்களுக்கு வழங்கப்படும் என மீன் கடைக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், தக்காளி விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உச்சத்தில் இருக்கிறது. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு சில இடங்களில் தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தக்காளிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. தக்காளி விலை உயர்வின் காரணமாக சில விவசாயிகள் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் ஒரே நாளில் மாறிய சம்பவங்களும் நடந்தன. அதேபோல தக்காளி விலை உயர்வால் ஆங்காங்கே தக்காளியைத் திருடிச்செல்லும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. இதனை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. பல்வேறு திருமண நிகழ்வுகளில் மணமக்களுக்கு தக்காளிகளை பரிசாக வழங்கிய சம்பவங்களும் நடந்தன. தக்காளி விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைய ஆரம்பித்து உள்ளது. தற்போது விலை சற்று குறைந்து இருந்தாலும், தக்காளி விலை உயர்வு பலருக்கும் கவலை அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது. இதனிடையே சில இடங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கப்படும் என சில கடை உரிமையாளர்கள் அறிவித்தனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் மீன் வாங்கினால் தக்காளி இலவசம் என மீன் கடைக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார்.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வருபவர் ஜாபர். இவர் தனது கடைக்கு மீன் வாங்க வருபவர்களுக்கு கால் கிலோ  தக்காளி இலவசமாக வழங்கி வருகின்றார். தக்காளி விலை உயர்வு காரணமாக மீன் மார்கெட்டிற்கு மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இன்றும், நாளையும் என இரண்டு தினங்கள் மீன் வாங்குபவர்களுக்கு தக்காளி இலவசமாக கொடுப்பதாக கடை உரிமையாளர் ஜாபர் தெரிவித்தார். மீன் வாங்கியதற்காக, தக்காளி விற்கும் விலைவாசிக்கு அதை இலவசமாக கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக கடைக்கு வந்த பெண்கள் தெரிவித்தனர். கால் கிலோ தக்காளி இலவசமாக கொடுத்ததால் கூடுதலாக மீன் வாங்கி செல்வதாகவும் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மீன் கடைக்காரரின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க : கோவையில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை; சிறப்பம்சங்கள் என்னென்ன?

 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget