மேலும் அறிய

CBI அதிகாரி என நடித்த மர்ம நபர்… கோவையில் முதியவரிடம் ₹20 லட்சம் பறிப்பு...

கோவையில் “டிஜிட்டல் கைது” என மிரட்டிய சைபர் மோசடி கும்பல்,63 வயது முதியவரிடம் ரூபாய் 20 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூபாய் 20 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவர் வார்ப்பட்ட தொழில் செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், “உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதனால் உங்கள் வங்கி கணக்கை பரிசோதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு அந்த முதியவர், “நான் யாருக்கும் பணம் அனுப்பவில்லை” என்று பதிலளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் “உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். நாங்கள் கூறும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. மீறினால் ஆயுதம் ஏந்திய போலீசார் உங்களை கண்காணித்து வருகிறார்கள்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், “உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் கணக்கிற்கு அனுப்புங்கள். சரிபார்த்த பிறகு திருப்பி அனுப்பிவிடுகிறோம். இதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது” என கூறி அச்சுறுத்தியுள்ளார். இதனால் பயந்துபோன முதியவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 20 லட்சத்தை அந்த நபர் கூறிய கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

பின்னர் மூன்று நாட்கள் யாரும் தொடர்பு கொள்ளாததால் சந்தேகம் அடைந்த அவர், அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் மோசடிக்கு ஆளானது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், “டிஜிட்டல் கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை. பொதுமக்கள் இதுபோன்ற மோசடி அழைப்புகளை நம்ப வேண்டாம்” என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget