மேலும் அறிய

’கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ – கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்

"கோவை மாவட்டம் முழுவதும் வால்பாறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பவானி ஆற்றுப்பகுதி உள்ளிட்ட 21 இடங்கள் குறைவான பதற்றம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது"

வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், koovai மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாரஸ் அகமது, “கோவை மாவட்ட நிர்வாகம் வட கிழக்கு பருவ மழை  முன்னேற்பாடுகளை சிறப்பாக எடுத்திருக்கிறது. தாலுக்கா வாரியாக பொது மக்கள் தங்களது பிரச்சனைகளை   தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டிருக்கின்றன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரச்சனை இருக்கும் பகுதிகளை நாளை பார்வையிட உள்ளோம். மாவட்டம் முழுவதும் பருவ மழை பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.

’கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ – கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்

பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், ”கோவை மாவட்டம் முழுவதும் வால்பாறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை,  பவானி ஆற்றுப்பகுதி உள்ளிட்ட 21 இடங்கள் குறைவான பதற்றம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.  இந்தப் பகுதியில். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 17 பழங்குடியின கிராமங்களுக்கு ஏழு நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கி உள்ளோம். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்த பிரச்சனை வந்தாலும் உடனே அவர்களுக்கு உதவ முதல் நிலை மீட்பாளர்கள் 1835 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும்  பள்ளிக்கு வரத் தேவையில்லை. அதே சமயம் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும்” என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய மாநகராட்சி ஆணையர் ராஜா கோபால் சுங்காரா, “இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக மழை பெய்ததால் மழை நீர் தேங்கியது. மாநகராட்சிப் பகுதியில் மேம்பாலங்களின் கீழ் மழை நீர் தேங்காமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாலாங்குளம் உபரி நீர் பாதாள சாக்கடை வழியாக நொய்யல் நதிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த பிரச்சனையும் குறைந்து வருகிறது” என அவர் தெரிவித்தார். மாநகரம் மற்றும் மாவட்டங்களில் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாக ஆணையர் தீபக் தாமோதர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

https://bit.ly/2TMX27X

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

https://bit.ly/3AfSO89

ட்விட்டர் பக்கத்தில் தொடர

https://bit.ly/3BfYSi8

யூடிபில் வீடியோக்களை காண

https://bit.ly/3Ddfo32

தலைப்பு செய்திகள்

Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget