மேலும் அறிய

தங்கை குறித்து அவதூறு ; நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர் - கோவையில் பயங்கரம்

காவல் துறையினர் விசாரணையில் பரமசிவம் குடிபோதையில் தன் தங்கையை தவறாக பேசியதால், பரமசிவத்தை கல்லால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ஓடக்கல்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தலையில் காயங்களுடன் கிடப்பதாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி மாரப்பன் என்பவரது மகன் பரமசிவம் (28) என்பது தெரியவந்தது. மேலும் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த பரமசிவம் சில மாதங்களாக பணிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டு, இரவு நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்த நிலையில், ஓடக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் விசாரணையில் பரமசிவம் குடிபோதையில் தன் தங்கையை தவறாக பேசியதால், பரமசிவத்தை கல்லால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவத்தன்று பரமசிவம் தனது நண்பர்களான பார்த்திபன் மற்றும் வரதராஜன் ஆகியோருடன் மது அருந்த சென்ற நிலையில், பார்த்திபன் மட்டும் வீடு திரும்பி உள்ளார். பரமசிவமும், வரதராஜனும் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், போதை தலைக்கேற வரதராஜனின் தங்கை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வரதராஜன் பரமசிவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது வரதராஜன் அருகில் இருந்த கல்லை எடுத்து பரமசிவத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பரமசிவம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற வரதராஜன் கடந்த சில தினங்களாக வதம்பச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்த நிலையில் சுல்தான்பேட்டை காவல் துறையினர் பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Bank Locker Charges: பயனர்கள் அதிர்ச்சி -  லாக்கர் கட்டணத்தை உயர்த்திய வங்கிகள், ஒவ்வொரு வங்கிக்கான விவரம் இதோ..!
Bank Locker Charges: பயனர்கள் அதிர்ச்சி - லாக்கர் கட்டணத்தை உயர்த்திய வங்கிகள், ஒவ்வொரு வங்கிக்கான விவரம் இதோ..!
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Bank Locker Charges: பயனர்கள் அதிர்ச்சி -  லாக்கர் கட்டணத்தை உயர்த்திய வங்கிகள், ஒவ்வொரு வங்கிக்கான விவரம் இதோ..!
Bank Locker Charges: பயனர்கள் அதிர்ச்சி - லாக்கர் கட்டணத்தை உயர்த்திய வங்கிகள், ஒவ்வொரு வங்கிக்கான விவரம் இதோ..!
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
பள்ளியில் வந்த பிரசவ வலி! பெண் குழந்தையை பெற்ற 11ம் வகுப்பு மாணவி - நாமக்கல்லில் ஷாக்!
பள்ளியில் வந்த பிரசவ வலி! பெண் குழந்தையை பெற்ற 11ம் வகுப்பு மாணவி - நாமக்கல்லில் ஷாக்!
Watch Video: பாவம்! தாயைப் பிரிந்த தவிப்பு! வாகனங்களை வழிமறித்த குட்டியானை - பாருங்க
Watch Video: பாவம்! தாயைப் பிரிந்த தவிப்பு! வாகனங்களை வழிமறித்த குட்டியானை - பாருங்க
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
Embed widget