”என்ன ட்ரெஸ் இது?” பூ மார்க்கெட்டிற்கு சென்ற மாணவி! மிரட்டிய ஆண் பூ வியாபாரிகள்!
கோவையில் பூ மார்க்கெட்டில் பூ வாங்குவதற்ககா sleeveless ஆடையில் சென்ற மாணவியை அங்கிருந்தா ஆண் பூ வியாபாரிகள் கூட்டமாக சேர்ந்து தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பூ மார்க்கெட்டில் பூ வாங்குவதற்ககா sleeveless ஆடையில் சென்ற மாணவியை அங்கிருந்தா ஆண் பூ வியாபாரிகள் கூட்டமாக சேர்ந்து தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூ மார்க்கெட்டிற்கு சென்ற பெண்:
கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் மொத்தமாகவும் சில்லரையாகவும் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பலரும் பூ வாங்க வேண்டும் என்றால் இந்த மார்க்கெட்டுக்குத்தான் வர வேண்டும்.
என்ன ட்ரெஸ் இது? மிரட்டிய ஆண் பூ வியாபாரிகள்:
இந்த நிலையில் தான் அந்த பூ மார்க்கெட்டிற்கு சட்டக்கல்லூரி மாணவி ஜனனி என்பவர் நேற்று (செப்டம்பர் 23) பூ வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அவர் ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து வந்ததால் அங்கிருந்து ஆண் பூக்கடை உரிமையாளர் அந்த மாணவியை திட்டியுள்ளார். அப்போது , இது அரைகுறையான ஆடையா? ஒருத்தர் அணியக்கூடிய உடை என்பது அவர்களின் உரிமை என பதிலுக்கு அந்த மாணவி பேசுகிறார். இங்கு இந்த உடை அணியக் கூடாது என்று யார் கூறியது. உங்களின் உடைக் கூடத்தான் சரியில்லை என்றும் அந்த மாணவி கூறுகிறார்.
அவரிடம் முதலில் விவாதம் செய்த வியாபாரிக்கு ஆதரவாக மேலும் சில ஆண்கள் அங்கு வந்தனர். அப்போது அந்த மாணவி, மார்க்கெட்டுக்கு வருவோர் எப்படிப்பட்ட உடை அணிந்து வரவேண்டும் என யாராவது கூறியிருக்கின்றனரா? இல்லையென்றால் அதை ஒரு பட்டியலிட்டு வெளியே போர்டு வைத்துவிடலாமே என்று சொல்கின்றர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அந்த மாணவி ஜனனி தரப்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜனனி மற்றும் அவரது நண்பர் மீது பூ வியாபாரிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






















