மேலும் அறிய

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக, திமுகவினர் இடையே கைகலப்பு

திமுக உறுப்பினர் பாபு என்பவர் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சக உறுப்பினர் அவர்களை சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றனர்.

கோவை மாநகராட்சி மாமன்றத்தின் முதல் சாதாரண கூட்டம், டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாமன்ற கூட்டத்திற்கு வந்த 9 காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக சைக்கிளில் வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதே போல் மாமன்ற கூட்டத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், பார்த்திபன் ஆகியோர் சொத்து வரி உயர்வை கண்டித்து கருப்பு உடை அணிந்து மாமன்ற கூட்டத்திற்கு வந்தனர். 


கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக, திமுகவினர் இடையே கைகலப்பு

இதையடுத்து மேயர் கல்பனா தலைமையில் துவங்கிய கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச் செல்வன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் மாமன்ற சாதாரன கூட்டத்தில் சொத்து வரி குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என திமுக உறுப்பினர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்தினர். இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் குப்பைகளை எடுக்க வரும் லாரிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி பேசும் போது, அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம், மற்றும் பூங்கா பராமரிப்பில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதாகவும், அவற்றை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக உறுப்பினர் பிரபாகரன் மண்டல தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார். இதனால் திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர் குரல் எழுப்பியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக, திமுகவினர் இடையே கைகலப்பு

இதை தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும், ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதே போல் கோவை மாநகராட்சியிலும் வார்டுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா கூறும் போது: கோவை மாநகராட்சி 1997 சட்டப்படி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய மட்டுமே சட்ட விதிமுறை உள்ளது என தெரிவித்தார். அவ்வாறு வார்டுக்கு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கு அனுப்பலாம். இது குறித்து அரசு தான் முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தார். அதே போல் மீண்டும் எழுந்து பேசிய கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் தொகுதிகளுக்கு வருவது இல்லை. இதனால் தான் குடிநீ்ர  சாக்கடை பிரச்சனை நிழவி வருகிறது. அவர்கள் இது குறித்து அவர்கள் ஏதும் கண்டுகொள்வதில்லை என தெரிவித்தார். இதனால் மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து விவாதம் நடைபெற்ற போது சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதோடு, தீர்மான நகலையும் கிழித்து எறிந்தனர். அப்போது கோவை மக்களை வஞ்சிக்க கூடாது எனக் கூறி முழக்கங்களை எழுப்பிதால் திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக உறுப்பினர் பாபு என்பவர் அதிமுக கவுன்சிலர் பிரபகரனை தள்ளிவிட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சக உறுப்பினர் அவர்களை சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றனர். இதையடுத்து கூட்டத்தை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 


கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக, திமுகவினர் இடையே கைகலப்பு
அப்போது செய்தியாளர்களிடம் கூறும் போது, ”100 சதவீத சொத்து வரியை கொண்டு வந்ததை கண்டித்து கேள்வி எழுப்பியதற்கு தாக்க முற்பட்டனர். இது தான் திராவிட மாடலா? இந்த வரி வசூலை திமுக உறுப்பினர்கள் நியாப்படுத்தி பேசுகிறார்கள். இந்த ஆண்டு கோவை மாநகராட்சி 350 கோடி வசூல் செய்துள்ளது. தனியார் நிதி நிறுவனம் போல நடந்து கொண்டனர். மக்கள் மீது வரி திணிப்பு செய்துள்ளனர். வாக்களித்த மக்களுக்காக தாங்கள் மாமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்தோம். இப்போதும் மக்களுக்கான இயக்கமாக அதிமுக செயல்பட்டு வருகிறது காலஅவகாசம் அளிக்காமல் இப்படி வரியை உடனடியாக ஏற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தனர்.

இதனிடையே சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் 2 மாமன்ற கூட்டங்களுக்கு பங்கேற்க தடை விதித்து மாநகராட்சி மேயர் கல்பனா உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget