மேலும் அறிய

CM Stalin : 'எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை’ - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

”எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கும், இழிச்சொல்லுக்கும் பதிலளிக்க எனக்கு நேரமில்லை. அந்தத் தலைவர்களை நான் விமர்சிக்க போவதில்லை. மக்களுக்காக பாடுபட்டு மக்கள் பாராட்டு பெற வேண்டும் என விரும்புகிறேன்.”

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, தேதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன், முன்னாள் பாஜக மாநில மகளிரணிச் செயலாளர் மைதிலி உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களை, மாற்றான்தாய் மனப்பான்மை என நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என நினைக்கின்றேன். சேர வேண்டிய இடத்திற்கு வந்து உள்ளீர்கள்.உங்களது முக மலர்ச்சி எனது மன மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

CM Stalin : 'எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை’ - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு செயலில் இறங்கினால், அது பாராட்டுக்குரிய செயலாக இருக்கும். இன்னும் பலரும் இந்த இயக்கத்தை நோக்கி வர தயாராக காத்திருக்கிறார்கள். மாற்றுக்கட்சியினர் 50 ஆயிரம் பேர் இணைகிறார்கள் என அமைச்சர் செந்தில்பாலாஜி வெறுமனே கணக்கு காட்டவில்லை. 50 ஆயிரம் பேரின் பட்டியலை ஆதாரத்துடன் என்னிடம் தந்தார். எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம் என நினைப்பவர் செந்தில் பாலாஜி. ஆச்சிப்பட்டி எனக்கு ஆச்சரியப்பட்டியாக காட்சியளிக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் திமுகவின் கொள்கைகளை நமது கொள்கைகளை கொண்டு செயல்பட்டு வருகிறோம். திமுக கட்சி துவங்கி 19 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது. சிலர் கட்சி துவங்கியதும் அடுத்த ஆட்சி எனது என்கின்றனர். சிலர் கட்சி துவங்கும் முன்பே அடுத்த முதலமைச்சர் என்கின்றனர்.

CM Stalin : 'எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை’ - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

நம்மைப் போல வெற்றி, தோல்வி பெற்ற கட்சி நாட்டில் இருக்க முடியாது. நாம் அடையாத புகழும், அவமானமும், சாதனையும், வேதனையும் இல்லை. 70 ஆண்டுகள் கடந்தும் கட்சி நீடிக்க காரணம் நாம் கொள்கைக்காரர்கள் என்பது தான். அக்கொள்கைக்காக உயிரையும் தர தயாராக இருக்கிறோம். அண்ணா, கருணாநிதியால் வளர்க்கப்பட்ட கட்சி. இது அரசியல் கட்சி மட்டுமல்ல. கொள்கை கோட்டை. இங்கு கட்சிக்காரராக அல்லாமல் கொள்கைக்காரர்களாக செயல்பட வேண்டும்

திராவிடம் என்பது சமூக நீதி, சம நீதி, இன உரிமை, மாநில உரிமை, கூட்டாட்சி தத்துவம். திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கை கொண்டது. திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எந்த ஆட்சியும் செய்யாத, நாட்டில் எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளை திமுக செய்து வருகிறதுஎனக்கூறிய அவர், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

CM Stalin : 'எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை’ - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், “திமுக அரசின் சாதனைகளை பார்த்து பலருக்கு மகிழ்ச்சி. சிலருக்கு அதிர்ச்சி. இந்தளவு சிறப்பாக ஆட்சி நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை என பலர் என்னிடம் சொல்கின்றனர். நான் சொல்லி செய்பவன் அல்ல. சொல்லாமல் செய்பவன். 70 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மற்ற வாக்குறுதிகளும் அண்ணா மீது ஆணையாக நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கும், இழிச்சொல்லுக்கும் பதிலளிக்க எனக்கு நேரமில்லை. அந்தத் தலைவர்களை நான் விமர்சிக்க போவதில்லை. மக்களுக்காக பாடுபட்டு மக்கள் பாராட்டு பெற வேண்டும் என விரும்புகிறேன்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் பணிக்கு தயாராகிக் கொள்ளுங்கள். மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் கட்சி கொள்கை, இலட்சியம், வரலாறு தெரிந்து கொள்ளுங்கள். கருப்பு, சிவப்பு மனிதராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். ஆட்சிக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இணைந்து பணியாற்ற 55 ஆயிரம் பேரை அமைச்சர் செந்தில் பாலாஜி இணைந்துள்ளது கட்சியின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுஎனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget