வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம் - அலட்சியமாக இருந்த தாய் மீது வழக்கு..!
புண்ணியவதிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வீட்டில் வைத்து யாருடைய உதவியும் இன்றி தனக்குத் தானே பிரசவம் பார்த்ததுள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கோவையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த போது குழந்தை உயிரிழந்த நிலையில், குழந்தை உயிரிழக்க காரணமாக இருந்ததாக தாய் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். நகை பட்டறை தொழிலாளியான இவருடைய மனைவி புண்ணியவதி (32). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் புண்ணியவதி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். நான்காவது குழந்தை என்பதால் மன வருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது. மேலும் நான்காவது குழந்தையை பெற்றெடுப்பதில் அவர் விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான அவர், மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் புண்ணியவதிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வீட்டில் வைத்து யாருடைய உதவியும் இன்றி தனக்குத் தானே பிரசவம் பார்த்ததுள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள்கொடி சரியாக அறுபடாமல், பிரசவமும் சரியாக இல்லாததால் குழந்தையும், தாயும் மயங்கினர்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் தாய் மற்றும் குழந்தை மயக்கமடைந்த நிலையில் இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரியாக பிரசவம் பார்க்காதால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து புண்ணியவதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த முதுகுளத்தூர் மணிகண்டன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் - போலீஸ் தகவல்
இது குறித்த தகவல் அறிந்த பெரிய கடை வீதி காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கோவை மாவட்ட குழந்தை நலச்சங்கத்தை சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவர் பெரிய கடை காவல் நிலையத்தில் புண்ணியவதி மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315 (குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டில் பிரசவம் பார்த்து குழந்தை உயிரிழக்க வேண்டுமென அலட்சியமாக இருந்த தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்