மேலும் அறிய

Annamalai: உதயநிதியின் பேச்சு திமுகவை மூட்டைக்கட்டி கடலில் வீசும் - பாஜக தலைவர் அண்ணாமலை சாடல்!

தமிழகத்தை விட பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்குவதாக திமுக கூறி வருவதில் பொய் உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக திமுக அரசு எப்படியாவது சண்டை போட வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஜனநாயக நாட்டில் ஓட்டைகள் போட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் குழு 20 ஆம் தேதி வந்து ஆய்வு செய்ய வந்ததாகவும், அதன் பின் தான் தமிழக முதல்வர் 21 ஆம் தேதி ஆய்வுக்கு வருவதாகவும், இதன் மூலம் தமிழக மக்களின் பொறுப்பின்மை, அக்கறையின்மையுடன் செயல்பட்டு வருவதாக சாடினார்.

சேலத்தில் இளைஞரணி மாநாடு, இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசை வம்புக்கு இழுப்பதே முதல்வரின் மகனுடைய வேலையாக உள்ளதாகவும், தேசிய பேரிடர் என பெயரை பயன்படுத்த சட்டம், விதி கிடையாது என்றும், ஆனால் தேவைப்படும் உதவியை மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் தூத்துக்குடி சென்று முழுமையாக பார்த்து நேரடியாக ஆய்வு செய்ய உள்ளார். வெள்ள பாதிப்பில் தமிழக அரசு சரியாக பணிகள் மேற்கொள்ளாததால், அதனால் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தை விட பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்குவதாக திமுக கூறி வருவதில் பொய் உள்ளது. கடந்த காலங்களில் குஜராத் மாநிலத்திற்கு புயல் பாதிப்பு, கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட நிதியை சுட்டிக்காட்டி, பொய் சொல்வது திமுகவின் வழக்கம் என்றவர். தென் தமிழகம் பாதிப்பு தொடர்பான கணக்கு பட்டியல் இன்னும் மாநில அரசு கொடுக்கவில்லை என்றும், இருப்பினும், மத்திய அரசு விரைவாக நிவாரண நிதி கொடுக்கப்படும் என்றார். மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தாலே சிவப்பு எச்சரிக்கையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றபோது, அதை பொருட்படுத்தாமல் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு சென்றுவிட்டு, முன் கூட்டியே அறிவிப்பு சொல்லவில்லை என அபத்தமான விவாதத்தை திமுக மட்டுமே சொல்ல முடியும்.

Annamalai: உதயநிதியின் பேச்சு திமுகவை மூட்டைக்கட்டி கடலில் வீசும் -  பாஜக தலைவர் அண்ணாமலை சாடல்!

திருநெல்வேலி மேயர் வெள்ளத்தின் போது சேலத்தில் இருந்தார். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை புயலால் ஏற்பட்ட பாதிப்பால் அடுத்த 3 மாதங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளதை குறிப்பிட்டு, வருவாய் இழப்பு திமுக ஆட்சியில் அதிகளவில் ஏற்படும் என்றும், 450 கோடி முன் கொடுத்த சென்னைக்கு 550 கோடி என மொத்தம் மத்திய அரசு கொடுத்த 1000 கோடியை முதலில் செலவழியுங்கள் என்றார். பிரதமரை வேண்டா வெறுப்பாக முதல்வர் சந்தித்ததார். அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி பயன்படுத்தியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணி கூட்டத்தின் போது ஸ்டாலின், டி.ஆர்.பாலுவுக்கும் ஹிந்தி பாடம் எடுத்து அனுப்பியுள்ளார் என்றும், உதயநிதி சனாதன பேச்சு காரணமாக நிதிஷ்குமார் திமுக இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற எண்ணுகிறது.

உதயநிதியின் பேச்சு திமுகவை மூட்டைக்கட்டி கடலில் வீசும் பணியை செய்வதாக விமர்சித்தார். பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் என 4 சாதிகள் தான் இந்தியாவில் உள்ளதாகவும், ஏழை என்ற சாதி இருக்கக்கூடாது என்பதே பாஜகவின் நிலைபாடு என்றவர், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வன்முறையை ஏற்படுத்தியுள்ளது. சாதி கணக்கெடுப்பு வன்முறையை தூண்டும் என்றும், தமிழகத்தில் அது வேண்டுமா என்ற கேள்வி எழுப்பி, சாதிவாரி கணக்கெடுப்பு அரசியலுக்காக பேசலாம் என்றார். கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக அரசின் சோதனை தொடர்பான கேள்விக்கு, நண்பர்கள் இடையேயான சண்டை என்றும், குத்து சண்டையில் தெரியாமல் குத்துவது போல் தான் இதை பார்ப்பாதாக சாடினார்.

கர்நாடகாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி, அதில் எப்படி பாஜகவால் தான் சோதனை என்று சொல்ல முடியும் என்றும், அப்படி சொல்வதானால் தான் திமுகவிற்கு மூளை கிடையாது என்று சொல்வதாக தெரிவித்தார். முதல்வரை சந்திக்க இரு முறை கேட்டும் அனுமதி கொடுக்காததால், கம்யூனிஸ்ட் போல அழையா விருந்தாளியாக நாங்கள் போக மாட்டோம் என்றும், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க போராட்டம் நடத்துவோம் என்றவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தேவையற்றது என்றும், சாவியை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும், லைட் போட்ட இடத்திலாம் தேடக்கூடாது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget