மேலும் அறிய

தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் ? – நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு...

தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி பிரச்சினைகள் நிலவி வருவதால் அதுகுறித்து கருத்து சொல்ல முடியாது என்று கோவையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில், கட்சியின் மையக் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தலுக்கு பிந்தைய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நாளை தனியாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

கோவையில் மையக் குழு கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து பேசிய அவர், “இதற்கு எந்த பிரத்தியேக காரணமும் இல்லை. கடந்த முறை சென்னை நகரில் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கோவையில் நடத்தப்படுகிறது” என்றார்.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக இடையேயான உறவு அமைதியாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால் தேர்தலுக்கு பிறகு அக்கட்சியில் உள்கட்சி பிரச்சினைகள் நிலவி வருவதால், அதுகுறித்து எதுவும் கருத்து சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “தேர்தல் காலத்தில் அதிமுக ஒத்துழைக்கவில்லை என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. அது தொடர்பாக மையக் குழு கூட்டத்திலும் எந்த விவாதமும் நடைபெறவில்லை” என்றும் கூறினார். அதிமுக உள்கட்சி பிரச்சினையை தீர்க்க பாஜக உதவுமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார். இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget