மேலும் அறிய

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது பாய்ந்த குண்டர் சட்டம் - மாணவி தற்கொலையும் வழக்கின் பின்னணியும்...!

கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவி தற்கொலை குறித்து 4 தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு பேர் யார்?, வேறு யாரேனும் தற்கொலைக்கு தூண்டுனார்களா? தற்கொலைக்கு வேறு எதேனும் காரணங்கள் இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாட்கள் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்தியிடம் கோவை மாநகர காவல் துறையினர் வழங்கினர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget