Zomato : 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் திட்டம் இல்லை: சென்னை காவல்துறைக்கு விளக்கமளித்த சுமோட்டோ
ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் சுமோட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் முன்னிலையில் இருக்கின்றன
ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் சுமோட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் முன்னிலையில் இருக்கின்றன. அதில், சுமோட்டோ நிறுவனம் இன்ஸ்டன்ட் என்ற பெயரில் கடந்த 22ம் தேதி 'உணவு ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும்' என்று தனது அதிகாரப்பூர்வாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்தது.
அதற்கு, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி எப்படி 10 நிமிடங்களில் பொதுமக்களுக்கு உணவு டெலிவரி செய்யமுடியும். ஆர்டரின் படி உணவு கொண்டு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று சுமோட்டோ நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சிஷரட்கர் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமோட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது உணவு வழங்கும் ஊழியர்கள் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமலும் போக்குவ ரத்து விதி மீறல்கள் இல்லா மல் உணவு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Wohoo! Zomato Instant is here to deliver your food in just 10 minutes - without any risks or penalties for the delivery partners.
— zomato (@zomato) March 21, 2022
Read more about Zomato Instant here: https://t.co/pbr9ySCJ9Z https://t.co/Q82FgOcks4
இந்த கூட்டத்திற்கு பிறகு சுமோட்டோ நிறுவன அதிகாரிகள் '10 நிமிட டெலிவரி திட்டம்' இந்தியாவில் சில நகரங்களில் மட்டுமே தொடங்க திட்டமிட்டப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் என்றும், சுமோட்டோ இன்ஸ்டன்ட் என்ற 10 நிமிட டெலிவரி திட்டம் தற்போது சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமில்லை. அதேபோல், ‘குறிப்பிட்ட விநியோக நேரம்' சம்மந்தப்பட்ட எந்தொரு திட்டமும் முன்னறிவிப்பு மற்றும் காவல் துறை ஒருங்கிணைப்புடன் மட்டுமே தொடங்கப்படும் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்