Rain update: தொடரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை இருக்கு...
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25 - 28ஆம் தேதி வரை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 24, 2022
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
காமாட்சிபுரம் (திண்டுக்கல்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 3 செ.மீ
பாப்பாரப்பட்டி KVK (தருமபுரி), செருமுள்ளி (நீலகிரி) தலா 2 செ,மீ
சின்கோனா (கோயம்புத்தூர்), வேடசந்தூர், (திண்டுக்கல்), மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சோலையாறு, (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
Weather forecast for next 7 days-Chennai pic.twitter.com/pQTB4kqrVD
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 24, 2022
இன்று (ஜூன்.24) முதல் ஜூன்.28 வரை லட்சத்தீவு பகுதி, கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோல் இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்