மேலும் அறிய

தொடர் கனமழை எதிரொலி; செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து தண்ணீர் திறப்பு! எவ்வளவு தெரியுமா?

chembarambakkam lake: செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு பகலாக பெய்த மழையில் அணைகளில் நீர் நிரம்பியது. 

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 1,180 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையால் நிரம்பி விடும். இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிட்டப்பட்ட நீரால் சென்னையில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் சென்னை புறநகரில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஒவ்வொரு பருவமழை மற்றும் புயலால் ஏற்படும் மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் குறித்து காணலாம்.
 

தொடர் கனமழை எதிரொலி; செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து தண்ணீர் திறப்பு! எவ்வளவு தெரியுமா?
 
செம்பரம்பாக்கம் இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஏரிக்கு நீர் வரத்தானது 1180 கனடியாக உள்ளது. நீர் வெளியேற்றுமானது 150 கன வழியாக இருக்கிறது ( மெட்ரோ குடிநீருக்கு 108 கன அடி, சிப்காடுக்கு 3 கன அடி, நீர்ப்பாசனத்துக்கு 5 கன அடி) 24 அடி கொள்ளளவில்  20. 64 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. சுமார் 2.7 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளது.
 
 
தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்து ஆனது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருவதால் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓட துவங்கி உள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 100 கனஅடி நீரை இன்று மதியம் மூன்று மணிக்கு திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன் அடிப்படையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறக்கப்படடது. தொடர்ந்து கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
புழல் ஏரியில் நீர் திறப்பு
 
சென்னை பெருநகர மக்களுக்கு மற்றொரு குடிநீர் ஆதாரமாக இருக்கும் புழல் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 2000 கன வந்து கொண்டிருப்பதால், புழல் ஏரியின் மொத்த கொள்ளளவ 3300 கன அடியில் தற்போது 2692 கன அடி நீர் இருப்பு உள்ளது.
 

தொடர் கனமழை எதிரொலி; செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து தண்ணீர் திறப்பு! எவ்வளவு தெரியுமா?
 
இதன் காரணமாக புழல் ஏரியில் இருந்தும், வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
வடகிழக்கு பருவ மழை
 
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget