மேலும் அறிய

Vinayagar Chaturthi 2023: விநாயகர் சிலையை இங்குதான் கரைக்க வேண்டும்.. மாவட்ட நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்..!

Vinayagar Chaturthi 2023 Chengalpattu : செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்

விநாயகர் சிலை  வைப்பது குறித்தும் அதை கரைப்பது குறித்தும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , தமிழ்நாடு  முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது.  நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.  நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

          எனவே, பொது மக்களுக்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.

  1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
  2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.  மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். 
  3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.  நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
  4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 
  5.  சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
  6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

வ.எண்

மாவட்டத்தின் பெயர்

விநாயகர் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்ட இடம்

1.

செங்கல்பட்டு மாவட்டம்

  • வடபட்டிணம்குப்பம்,                       செய்யூர் வட்டம்
  • மாமல்லபுரம் கடற்கரை, திருக்கழுக்குன்றம் வட்டம்

விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம். என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள   செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Embed widget