TVK Vijay: திமுக ஆட்சி சதவிகிதம்; விஜய் ஒப்பு கொள்வார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திமுகவின் ஆட்சி சதவிகிதம் குறித்து அண்ணாமலையே ஒப்புக் கொண்டிருக்கிறார். விரைவில் விஜயும் ஒப்புக் கொள்வார் என்று நம்புகிறேன்.

ஓரணியில் தமிழ்நாடு
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் ஓரணியில் தமிழ்நாடு மற்றும் முப்பெரும் விழா தொடர்பாக சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்: ஒன்றிய அரசாங்கத்தால் தொடர்ந்து தமிழ்நாடு பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்
கீழடி புறக்கணிப்பு , இந்து திணிப்பு , தமிழ்நாடு நிதி மறுப்பு , நீட் தேர்வு போன்ற நியாயமற்ற தேர்வுகள் , தொகுதி மறு வரை பல்வேறு சதித் திட்டங்களை தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது என்று கூறிய அமைச்சர் , இதனை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 1 கோடி குடும்பங்கள் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைந்து உள்ளதாகவும் சென்னை தெற்கு மாவட்டத்தில் உள்ள
மதுரவாயிலில் 75,296, விருகம்பாக்கத்தில் 46,546, சைதாப்பேட்டையில் 47,013, வேளச்சேரியில் 47,298 சோழிங்கநல்லூரில் 1,16,306 என மொத்தம் சென்னை தெற்கு மாவட்டத்தில் மொத்தம் 3,32,539 குடும்பங்கள் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைந்துள்ளனர் என கூறிய அமைச்சர் இதன் மூலம் சென்னை தெற்கு மாவட்டத்தில் 8,96,665 ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
பிரம்மாண்ட பொதுக் கூட்டம்
இந்தத் திட்டத்தின் வெற்றியை வாக்குச்சாவடி அளவில் ஒவ்வொரு வாக்குச்சாவடி தோறும் உறுதி மொழி ஏற்கும் நாளாக நாளை நடத்தப்பட உள்ளதாகவும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது என்றும்
சென்னை தெற்கு மாவட்டத்தில் 1,880 இடங்களில் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது என கூறிய அமைச்சர் செப்டம்பர் 17 ஆம் தேதி திமுக வரலாற்றில் முப்பெரும் விழா என்பது ஒரு மகத்தான விழா என்றும்
வரும் 20, 21 தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள தலைமை கழகம் சார்பில் சிறப்பு சொற்பொழிவாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் ஒவ்வொரு பொதுக் கூட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என உறுதி ஏற்கப்பட உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் செயல்படுத்துவோம் என்று கூறி அதனை செயல்படுத்துகின்றனர் என்றும் இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வருக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார்.
விஜய் பிரசாரத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ;
நடிகர் விஜயை பொறுத்தவரை அவர் நேற்றைக்கும் , தொடர்ந்து பேசும் செய்திகள் அவர் தெரிந்து பேச வேண்டும் அல்லது படித்து புரிந்து பேச வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி எந்த அளவு இருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்து இருக்கிறார்கள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருப்பவர்களும் தமிழ்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து மிகப் பெரிய அளவில் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் விஜய் புரிந்து கொள்ளவில்லை
14 ஆண்டுகளுக்கு முன்னால் 2010-11 ல் 13.1 சதவீதம் பொருளாதார வளர்ச்சி. அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 6, 7 என்ற அளவில் தான் இருந்தது. 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி தமிழ்நாடு எட்டியதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதை எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் ஏனோ புரிந்து கொள்ளவில்லை.
அண்ணாமலை ஒப்புக் கொண்டுள்ளார்
கல்வியில் ஒன்றிய அரசின் தேசிய சராசரி விகிதம் 29 என்ற நிலையில் தமிழ்நாட்டில் சதவீதம் 53 என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. இது விஜய்க்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறிய அமைச்சர் , திமுக அரசு எத்தனையோ நல திட்டங்களை செய்து இருக்கிறது என்று பட்டியலிட்டவர் , இதையெல்லாம் விஜய் புரிந்து கொள்ளாமல் போனது எந்த அளவிற்கு நியாயம் என்று தெரியவில்லை என்றும் ஆட்சி செய்பவர்களை எதிர்த்து அரசியல் செய்தால் , மேல் செல்ல முடியும் என்று நினைக்கிறார்கள். திமுகவின் ஆட்சி சதவிகிதம் குறித்து அண்ணாமலையே ஒப்புக் கொண்டிருக்கிறார். விரைவில் விஜயும் ஒப்புக் கொள்வார் என்று நம்புகிறேன் என்று கூறினார்.





















