மேலும் அறிய
Advertisement
Vijay Makkal Iyakkam: பசியை போக்கிய விஜய் மக்கள் இயக்கம்..! தொடர்ந்து ஆக்டிவாக இருக்க விஜய் முடிவு..! அடுத்து என்ன ?
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை விஜய் வரும் ஜூன் 17-ந் தேதி நேரடியாக சந்திக்கிறார்.
உலக பட்டினி தினம் 2023
நடிகர் விஜய்யின் உத்தரவுபடி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அறிவித்தபடி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட இந்த மதிய உணவை மக்கள் பலரும் வாங்கி பயன் பெற்றனர்.
விஜய் மக்கள் இயக்கம் ( vijay makkal iyakkam )
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் SPK தென்னரசு தலைமையில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், மாநகர செயலாளர் பிரபு ஆகியோர் இணைந்து உணவு ஏற்பாடு செய்து பசியை போக்கும் விதமாக ஒரு நாள் மதிய உணவு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆதரவற்றவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியில் உணவு அருந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய துனை தலைவர் ஆல்பர்ட் (எ) சார்லஸ் , மாவட்ட துனை தலைவர், பா.மணிகண்டன், மாணவரணி தலைவர் அபுபக்கர் மற்றும் மாநகர, ஒன்றிய, விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது. இதேபோன்று வந்தவாசியிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில், பொதுமக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வந்தவாசி நகர தலைவர் அருண் விஜய், வந்தவாசி ஒன்றிய தலைவர் சங்கர் ராஜேஷ் ஷாபி, வினோத், கோகுல், ஆனந்த் , அப்துல் ரகுமான் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அடுத்த திட்டம் இதுதான் ?
234 தொகுதி வாரியாக சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பரிசுகள் மற்றும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மாணவ மாணவிகளுக்கு விஜய் நேரடியாக உதவிகளை வழங்க இருக்கிற என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்யவும் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் 17ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. விஜய் அரசியலில் வருவது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தொடர்ந்து தன்னை மக்களிடையே ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion