மேலும் அறிய

Rain Alert: நாளை 8 மாவட்டங்களில் மிக கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை நாட்களுக்கு? முழு விவரம்..

நாளை தமிழகத்தில் டெல்டா மாவட்டம் உட்பட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழகத்தில் டெல்டா மாவட்டம் உட்பட  8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில், கடந்த மாதம் அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கி வட கிழக்கு பருவமழையால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நவம்பர் 7-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும். நாளை 8 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,  புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சீர்காழி (மயிலாடுதுறை) 22, தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 18, கொள்ளிடம் (மயிலாடுதுறை) 16, சிதம்பரம் (கடலூர்) 15, சேத்தியாத்தோப்பு (கடலூர்), சிதம்பரம் AWS,  (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 12, காட்டுமன்னார் கோயில் (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), புவனகிரி (கடலூர்) தலா 11, இளையங்குடி (சிவகங்கை) 10, உசிலம்பட்டி (மதுரை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தரங்கம்பாடி மயிலாடுதுறை), மானாமதுரை (சிவகங்கை) தலா 9, மணல்மேடு (மயிலாடுதுறை), கமுதி (ராமநாதபுரம்) தலா 8, நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), கமுதி ARG (ராமநாதபுரம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), மயிலாடி (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை), திருபுவனம் (மதுரை)), மதுராந்தகம் (செங்கல்பட்டு), அருப்புக்கோட்டை Agro (விருதுநகர்), ராம்நாடு Agro (ராமநாதபுரம்) தலா 7, மதுரை விமான நிலையம், மஞ்சளார் (தேனி), பரமக்குடி (ராமநாதபுரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) தலா 6, பெலாந்துறை (கடலூர்), பொள்ளாச்சி (கோவை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) , தொண்டி (ராமநாதபுரம்), ஆண்டிபட்டி (மதுரை), பெரியார் (தேனி), கடலூர், வந்தவாசி (திருவண்ணாமலை), வைகை அணை (தேனி), ஆண்டிபட்டி (தேனி), கீழ் கோதையார் ARG  (கன்னியாகுமரி), கோலியனூர் (விழுப்புரம்), கடவனூர் (கள்ளக்குறிச்சி), கொடநாடு (நீலகிரி), காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.

தலைப்பு செய்திகள்

சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget