மேலும் அறிய

டிடிஎஃப் வாசனின் அடி மடியில் கை வைக்கும் காவல்துறை; யூடியூப் சேனலுக்கு ஆப்பு

யூடியூப் சேனலை மறக்க காவல்துறையினர் வைத்த கோரிக்கை அடிப்படையில் நீதிமன்றம் நடவடிக்கை.

டிடிஎஃப்  வாசனுக்கு ஜாமீன்.

யூடியூப்-ல் 40 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட பிரபலமான டிடிஎஃப் வாசன், மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், விபத்தில் சிக்கினார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். 

பைக்கை எரித்துவிடலாம்..

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் டிடிஎப் வாசன். அந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும், அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து,  youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடலாம் என கருந்து தெரிவித்து இருந்தார்.
 
மூன்று வாரங்களுக்கு..
 
இதனிடையே டிடிஎப் வாசனுக்கு நவம்பர் 9-ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் இரண்டாவது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது எனவும், மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 தொடர்ந்து சர்ச்சையில்  வாசன் 

இந்தநிலையில் காவல்துறை சார்பில் டிடிஎஃப் வாசன் youtube சேனலை முடக்க   நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திற்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக,  youtube சேனல்  முடக்கப்பட வேண்டும். இதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது அவரது யூடியூப் சேனலை மறக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தனது இரு சக்கர வாகனத்தை தன்னிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு வருகின்ற 29ஆம் தேதிக்கு ஊத்தி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரது youtube சேனலை முடக்க நடவடிக்கை எடுத்திருப்பது பொதுமக்கள் இடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! கும்மிடிப்பூண்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
Coastal Cruise Tourism: கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget