மேலும் அறிய

Travel With ABP: சென்னை அருகே கம்மி பட்ஜெட்டில் சுற்றி பார்க்க வேண்டிய டாப் 5 இடங்கள்

Best Places to Visit in Chengalpattu: செங்கல்பட்டு மாவட்டத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் குறித்து பார்க்கலாம்

Chengalpattu Tourist Places: செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்ஜெட் சுற்றுலா போக விரும்புபவர்களுக்கு  சுவாரசிய தகவல்களை  கொண்டு வந்திருக்கிறது Travel With ABP.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - Vedanthangal Bird Sanctuary

இந்தியாவில் மிகப் பெரிய  நீர் பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் பார்வையிட சிறந்த நேரம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும். சாம்பல் வாக்டெயில், கார்கேனி, நீல இறக்கைகள் கொண்ட டீல், காமன் சாண்ட்பைப்பர், பின்டெயில், பாம்பு பறவைகள், மூர்ஹென்ஸ், டார்டர்ஸ், ஸ்பாட்-பில்ட் வாத்து, பெரிய ஈக்ரெட்ஸ், லிட்டில் ஈக்ரெட்ஸ், பெயிண்ட்டு நாரைகள், மண்வெட்டிகள், கிரே பெலிகன்கள், கார்மோரண்ட்கள் போன்ற பறவைகளை பார்க்க முடியும். நுழைவு கட்டணம் 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

Travel With ABP: சென்னை அருகே கம்மி பட்ஜெட்டில் சுற்றி பார்க்க வேண்டிய டாப் 5 இடங்கள்

செங்கல்பட்டு ரயில் நிலையம்  வந்தடைந்து அங்கிருந்து பேருந்திலும் செல்லலாம். தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வருபவர்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பட்டாளம் கூட்ரோடு பகுதியை  அடைந்து அங்கிருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சொல்லலாம். பட்ஜெட் சுற்றுலா செல்பவர்களுக்கு மிக சிறந்த இடம்.

மாமல்லபுரம் - Mamallapuram Temple

சுற்றுலா செல்பவர்களுக்கு மிக முக்கிய இடமாகவும்,  கலை பொக்கிஷங்கள் நிறைந்த இடமாகவும் மாமல்லபுரம் உள்ளது. மாமல்லபுரம் கடற்கரை,  மாமல்லபுரம் கடற்கரை கோயில்,  அர்ஜுனன் தபசு,  கலங்கரை விளக்கம்,  5 ரதம் ஆகிய பகுதிகளை மாமல்லபுரத்தில் கண்டு களிக்கலாம்.  ஒரு நாள் மாமல்லபுரத்தில் சுற்றி பார்ப்பது ஏற்ற இடங்கள் உள்ளன. கடற்கரை கோயில்  உள்ளே சென்று பார்ப்பவர்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பிற இடங்களை பார்க்க நுழைவு கட்டணம் தேவையில்லை. வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்தால்,  போக்குவரத்து செலவு மட்டுமே  தேவைப்படும்.

சென்னை,  தாம்பரம்,  செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.    பட்ஜெட்டுக்கு ஏற்ற இடம் மாமல்லபுரம் கடற்கரை கோயில்

வண்டலூர் உயிரியல் பூங்கா - vandalur zoo 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா குடும்பத்துடன் செலவு செய்ய ஏற்ற இடம்.  பெரியவர்களுக்கு நிறைவு கட்டணம் 200 ரூபாயும், குழந்தைகளுக்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வெளியில் இருந்து உணவுகளை எடுத்துட்டு வரலாம்,  என்பதால் கூடுதல் சிறப்பு.

பல்வேறு வகையான விலங்குகளை  குழந்தைகளுக்கு நேரில் காட்ட முடியும் என்பதால், கல்வி சுற்றுலாவும் இது அமையும். கிளாம்பாக்கம் அருகே உள்ளதால் பேருந்து வசதிக்கு பிரச்சனை இல்லை.  மின்சார ரயில் வசதியும் உள்ளது என்பதால்,  போக்குவரத்து செலவு   பட்ஜெட்டில் அடங்கிவிடும்.  சென்னை புறநகரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று.

முட்டுக்காடு படகு குழாம் - Muttukadu Boat House

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் ஈ.சி.ஆர் வழியாக வரும் பேருந்துகளில் வரலாம். பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் திருப்போரூர் அல்லது    கேளம்பாக்கம்   பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் வரலாம். மாநகர பேருந்துகள் படகு குழாம் அருகே நிற்கிறது. சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு பார்க்கிங் வசதியும் உள்ளது. பேருந்து வசதி இருப்பதால்,  போக்குவரத்து செலவு பட்ஜெட்டில் அடங்கிவிடும்.

Travel With ABP: சென்னை அருகே கம்மி பட்ஜெட்டில் சுற்றி பார்க்க வேண்டிய டாப் 5 இடங்கள்

படகு சவாரி செல்ல வேண்டாம் அதன் அழகை மட்டும் ரசித்தால் போதும்   என்பவர்கள் பத்து ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி விட்டு   அழகை  ரசிக்கலாம். படகு சவாரி விலையை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

கோவளம் ப்ளூ ஃப்ளாக் கடற்கரை - kovalam blue flag beach 

தமிழ்நாட்டில் இருக்கும் நீலக்கொடி கடற்கரை என சான்றிதழ் பெற்ற  கடற்கரையாக கோவளம்  கடற்கரை உள்ளது. பார்வையாளர்களுக்கு சுமார் 37 வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  கடற்கரை மணல் சுத்தம் செய்யப்படுகிறது.  சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகள் கடலில் விளையாடிவிட்டு,  குளிக்க விரும்புபவர்களுக்கு ஷவர் வசதிகள்  செய்யப்பட்டுள்ளது. இப்படி உலகத்தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் உள்ள கடற்கரையாக கோவளம் ப்ளூ   பிளாக் பீச் அமைந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Embed widget