மேலும் அறிய

Transgender Award: ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது; பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருதுக்கு பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருதுக்கு பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

திருநங்கைகள்‌ இச்சமூகத்தில்‌ சந்திக்கும்‌ எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில்‌ படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில்‌ முன்னேறி வருகின்றனர். அவ்வாறு சாதனை படைத்த திருநங்கையரை கெளரவிக்கும்‌ வகையிலும் மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும்‌ வகையிலும் திருநங்கையர்‌ தினம்‌ ஏப்ரல்‌ 15ஆம்‌ தேதி ஆக அறிவிக்கப்பட்டது. 

அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஏப்ரல்‌ 15ஆம்‌ தேதியன்று ஒவ்வொரு ஆண்டும்‌ திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும்‌ சான்று ஆகியவற்றுடன்‌ வழங்கப்பட்டு வருகிறது. 

இதனைத்‌ தொடர்ந்து, 2022- 2023ஆம்‌ நிதியாண்டிற்கான திருங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர்‌ தினமான ஏப்ரல்‌ 15-ம்‌ தேதி வழங்கப்பட உள்ளது. இதனால்‌, இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின்‌ விருதுகள்‌ இணையதளத்தில்‌ (awards.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் கூறி இருப்பதாவது:

’’தமிழக அரசால்‌ 2022- 2023ஆம்‌ ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருதிற்கு, திருநங்கைகளின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள்‌, இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின்‌ விருதுகள்‌ இணையதளத்தில்‌ விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக awards.tn.gov.in என்ற இணைய தள முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

awards.tn.gov.in என்ற இ- மெயில் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருதுக்கு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள்‌ விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கேட்டுக் கொண்டுள்ளார்‌.

திருநங்கையர்‌ தின விருது வழங்கும்‌ பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள்:‌

* திருநங்கைகள்‌ அரசு உதவி பெறாமல்‌ தானாக சுயமாக வாழ்க்கையில்‌ முன்னேறி இருத்தல்‌ வேண்டும்‌.
*  குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள்‌ வாழ்க்கையில்‌ முன்னேற உதவியிருக்க வேண்டும்‌.
* திருநங்கைகள்‌ நல வாரியத்தில்‌ உறுப்பினராக இருத்தல்‌ கூடாது.

கையேட்டில்‌ (Booklet) இணைக்கப்பட வேண்டியவை

* பொருளடக்கம்‌ மற்றும்‌ பக்க எண்‌.
*  உயிர்‌ தரவு ((Bio Data) மற்றும்‌ பாஸ்போர்ட்‌ சைஸ்‌ போட்டோ 2
*  சுயசரிதை
*  தனியரைப்‌ பற்றிய விவரம்‌ (ஒரு பக்க அளவில்‌)  Soft & Hard Copy
*  விருதுகளின்‌ விவரம்‌ (விருது பெற்றிருப்பின்‌ அதன்‌ விவரம்‌ விருதின்‌ பெயா்‌/ யாரிடமிருந்து பெற்றது? மற்றும்‌ பெற்ற வருடம்‌)
*  சேவை பற்றிய செயல்முறை விளக்கம்‌ (புகைப்படத்துடன்‌)
* சேவையை பாராட்டி பத்திரிகை செய்தித்‌ தொகுப்பு
*  சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை
* சமூக சேவையாளரின்‌/ சமூக சேவை நிறுவனத்தின்‌ சேவை மூலமாக பயனாளிகள்‌ பயனடைந்த விவரம்‌
*  சமூகப்‌ பணியாளர்‌ இருப்பிடத்தின்‌ அருகில்‌ உள்ள காவல்‌ நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல்‌ நடவடிக்கைகள்‌ ஏதும்‌ இல்லை என்பதற்கான சான்று.
*  கையேடு (Booklet) தமிழில்‌ அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள்‌ அனுப்பப்பட வேண்டும்‌’’.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget