Train Timing: காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் நேரம் என்ன என்ன தெரியுமா?
Train Timing: காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி செல்லும் ரயில்கள் நேர விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
Train Timing: காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி செல்லும் ரயில்கள் நேர விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டு நெசவுக்கு பெயர் பெற்றதாகவும், கோயில்கள் நகரமாகவும் காஞ்சிபுரம் விளங்கி வருகிறது. கோயில்களுக்கு செல்வதற்காகவும், பட்டு சேலை வாங்குவதற்காகவும் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதற்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் வந்து செல்வதற்காக பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல காஞ்சிபுரத்தில் இருந்து அலுவல் பணிக்காக பெரும்பாலானோர் சென்னைக்கும் அதன் புறநகர் பகுதிகளுக்கும் தினமும் சென்று வருகின்றனர்.
குறிப்பாக காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணம் அதிகமாக இருப்பதால் பேருந்துகளில் பயணிப்பதை மக்கள் தவிர்த்து, ரயில்களிலே அதிகம் பயணிக்க விரும்புகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, சென்னை கடற்கரை மற்றும் புதுச்சேரிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கான நேரங்களை தற்போது பார்ப்போம்.
மின்சார ரயில்கள் நேரம்
- அரக்கோணம் முதல் சென்னை கடற்கரை - காலை 5.15 மணி
- காஞ்சிபுரம் முதல் சென்னை கடற்கரை வரை - காலை 06.10 மணி
- அரக்கோணம் முதல் செங்கல்பட்டு - காலை 06.25 மணி
- திருமால்பூர் முதல் சென்னை கடற்கரை வரை (வேகமாக) - காலை 07.15 மணி
- அரக்கோணம் முதல் சென்னை கடற்கரை - காலை 08.15 மணி
- காஞ்சிபுரம் முதல் சென்னை கடற்கரை வரை - காலை 09.30 மணி
- திருமால்பூர் முதல் சென்னை கடற்கரை வரை - நண்பகல் 11.20 மணி
- திருப்பதி - பாண்டிச்சேரி (விரைவு ரயில் ) - காலை 08.20 மணி
- அரக்கோணம் முதல் சென்னை கடற்கரை வரை - மாலை 05.55 மணி
- அரக்கோணம் முதல் செங்கல்பட்டு - மாலை 07.00 மணி
- திருமால்பூர் முதல் சென்னை கடற்கரை வரை - இரவு 08.25 மணி
மேலும் படிக்க
Bridge Collapse : கடந்த 20 ஆண்டுகளில்.. பாலங்களில் நிகழ்ந்த மோசமான விபத்துக்கள் என்னென்ன தெரியுமா?