Kaanum pongal 2025 : காணும் பொங்கல்..சென்னையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகள் உஷார்
Kaanum pongal 2025: சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
![Kaanum pongal 2025 : காணும் பொங்கல்..சென்னையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகள் உஷார் Traffic Diversions in marina beach chennai kannum pongal 2025 full details Kaanum pongal 2025 : காணும் பொங்கல்..சென்னையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகள் உஷார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/15/379c5377f3868a154ecb1af3bee4296c17369475605151131_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காணும் பொங்கல்:
காணும் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்ப்ட உள்ளது. காணும் பொங்கலன்று பொது மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வெளியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள். சென்னையை பொறுத்தவரை வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை; பழனி உழவர் சந்தையில் இரு நாட்களில் 110 டன் காய்கறிகள் விற்பனை
போக்குவரத்து மாற்றம்:
16.01.2025 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
1. காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
2. மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து (War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் (Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் (Light House) இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை, பெல்ஸ் சாலை. விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
3. வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும். பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்)
Kaanum Pongal celebration on 16.01.2025
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) January 15, 2025
🚦Likely Traffic diversion in Kamarajar Salai, when vehicle flow increases🚧
🚦காணும் பொங்கல் முன்னிட்டு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் 🚧.
Motorists are requested to co-operate.#KaanumPongal #ChennaiTraffic 🅿️🚗 pic.twitter.com/KWPng0OeGy
4. கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையாக செயல்படும் பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி நோ என்ட்ரி ஆகவும் செயல்படும்.
5.காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் 13.00 மணி முதல் 22.00 மணி வரை அனுமதிக்கப்படாது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)