![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
Chennai weather report today: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வானிலை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
![காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன? Today weather forecast chennai kanchipuram and chengalpattu Where is it chance to rain full details June 03 tnn காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/9f16240b965a1be697f33e306bc499471692758121946113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றைவிட இன்று வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம் எப்படி உள்ளது ?
கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் ( kanchipuram weather report) , செங்கல்பட்டு ( Chengalpattu weather report ) மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் தெளிவாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது.
மே மாத ஆரம்பத்தில் இருந்ததை போல் மீண்டும் வெயில் வாட்டி வதைக்க துவங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் இயல்பை விட வெப்பம் அதிகம் காணப்பட்டு வருகிறது
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு இன்று (June 3) எதிர்பார்க்கப்படும் வானிலை ?
இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகும் காற்றின் அதிகபட்ச ஈரப்பதம் 78 சதவீதமாகவும் மற்றும் காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 40 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 14 கிலோமீட்டர் ஆகும் மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 2 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது
சென்னை வானிலை முன்னறிவிப்பு
இன்று அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகும். காற்றின் அதிகபட்ச ஈரப்பதம் 84 சதவீதமாகவும் மற்றும் காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 50 மேற்கு மற்றும் தென்மேற்கு இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 11 கிலோமீட்டர் ஆகும். தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)