மேலும் அறிய

Chennai Marina Beach: மெரினா பீச்சில் படகு சவாரி - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல், படகு சேவை தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சுற்றுலாத்துறை  மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் மதிவேந்தன் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும். பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினை மறுசீரமைக்க திட்ட ஆலோசகரின் அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.  சென்னை மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி ஒளியூட்டப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ளா ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும். பிச்சாவரம் சுற்றுலா தலம் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும். ஜவ்வாது மலை பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றல தலமாக மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல், படகு சேவை தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Marina Beach: மெரினா பீச்சில் படகு சவாரி - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் பொங்கலுக்கு ஆண்டு தோறும் இணைய வழியில் பிரமாண்ட கலை விழா நடத்தப்படும். கீழடி அகழ் வைப்பகத்திற்கு தேவையான 34 நிரந்தர பணியிடங்கள் ரூ.1.50 கோடியில் ஏற்படுத்தப்படும். தருமபுரி பெரும்பாலை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு, களஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் முதலைகுலம், அரிட்டாபட்டி, பூலாங்குறிச்சி, தொண்டூர், நெகனூர்பட்டி, ஆகிய ஐந்து கல்வெட்டுகளும் தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும். சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும். இயல், இசை, நாடக மன்றத்தில் வழங்கப்படும் தொகை ரூ.50,000 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.  தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் வகையில் லெய்டன் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ponniyin selvan | ‛மீண்டும் ஒரு பஞ்சாயத்து’ - த்ரிஷா, மணிரத்னத்தை கைது செய்ய இந்து அமைப்பு புகார்!

மேலும் படிக்க: HBD Vetrimaaran: வெற்றிகளும், வெற்றிமாறனும்.. பலரும்- அறியாத வெற்றிமாறனின் "பிளாஷ்பேக்"

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget